News
விஜய்யை தொடர்ந்து ரஜினிகாந்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ் !
ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் 171-வது படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
லியோ படத்திற்கு பின்னர் விக்ரம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து விட்டு ரஜினி நடிக்கும் படத்தை எடுக்கவிருந்தார் லோகேஷ் கனகராஜ் அது நடக்கவில்லை.
ரஜினி படத்தை முடித்த பின்னர் லோகேஷ் கனகராஜ் விக்ரம் இரண்டாம் பாகத்தை இயக்கவிருக்கிறார். அப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடிக்கும் கைதி 2, சூர்யா நடிக்கும் ஒரு படம் என இயக்கவுள்ளார்.
ரஜினிகாந்த் நடிக்கவுள்ள 171-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.