News

திருவனந்தபுரத்தில் ஆரம்பமான ரஜினி நடிக்கும் 170-வது படத்தின் படப்பிடிப்பு !

Published

on

அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் கவரும் விதமான பிளாக் பஸ்டர் வெற்றிப்படங்களை தயாரிப்பதற்காகவே பெயர்பெற்ற நிறுவனமான லைகா புரோடக்ஷ்ன்ஸ், தொடர்ந்து உற்சாகமான அறிவிப்புகளை கொடுத்து வரும் நிலையில், இந்த மாதத்தில் ‘தலைவர் 170’ பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சமூக நோக்கிலான கருத்து கொண்ட படங்களுக்காக அறியப்படும் இயக்குநர் TJ ஞானவேல் முதன்முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை இயக்குகிறார்.  

2.O, தர்பார் மற்றும் லால் சலாம் படங்களை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லைகா புரொடக்சன்ஸ் கூட்டணியில் நான்காவதாக உருவாகும்  ‘தலைவர் 170’ ஒரு பான் இந்தியா திரைப்படமாக தயாராகிறது.

பேட்ட, தர்பார் ஹிட் படங்களுடன் சமீபத்திய ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘தலைவர் 170’ படத்திற்காக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அனிருத் இருவரும் நான்காவது முறையாக ஒன்றிணைந்து பணியாற்ற உள்ளனர்.

இப்படத்தை ‘டாக் ஆப் தி டவுன்’ ஆக மாற்றுவதற்கான முயற்சியில் தயாரிப்பளார் சுபாஸ்கரன் எந்த ஒரு வாய்ப்பையும் நழுவ விட போவதில்லை. குறிப்பாக இந்தப்படத்திற்கான தனித்துவம் வாய்ந்த நடிகர்கள் குறித்த அடுத்தடுத்த தொடர் அறிவிப்புகளை அதிரடியாக வெளியிட்டு வருகிறார்கள். மீடியாக்கள் எதிர்பார்த்ததை போல பாலிவுட் மெகாஸ்டார் அமிதாப் பச்சன் அவர்கள் ” அந்தா கனூன், கிராப்தார் மற்றும் ஹம் ” ஆகிய படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இருவரும் திரையில்  இணைகிறார்கள் .

மஞ்சு வாரியர், பஹத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துடன் முதன்முறையாக நடிக்கிறார்கள் . ‘தலைவர் 170’ படப்பிடிப்பு தற்போது திருவனந்தபுரத்தில் பிரமிக்க வைக்கும் நட்சத்திரங்களுடன் துவங்கியுள்ளது.

 

Trending

Exit mobile version