Reviews
மாமன் – திரைவிமர்சனம் !

Cast: Soori, Aishwarya Lekshmi, Rajkiran
Production: K Kumar – Lark Studios
Director: Prasanth Pandiyaraj
Screenplay: Prasanth Pandiyaraj
Cinematography: Dinesh Purushothaman
Editing: Ganesh Siva
Music: Hesham Abdul Wahab
Language: Tamil
Runtime: 2H 32Mins
Release Date: 16 May 2025
காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக உருவாகி தொடர்ந்து வெற்றி படங்களை மட்டும் கொடுத்து வரும் சூரி. தற்போது நடித்துள்ள திரைப்படம் மாமன். உறவுகளின் ஆகச் சிறந்த அழகை காட்டும் திரைப்படம்.
இப்படம் திருமணமாகி 10 ஆண்டுகளாக குழந்தை பாக்கியமே இல்லாமல் இருக்கும் கிரிஜா (சுவாசிகா) மற்றும் ரவி (பாபா பாஸ்கர்) தம்பதியினர் குழந்தை பாக்கியம் வேண்டி பல விரதங்களை மேற்கொள்கின்றனர். கிரிஜாவின் சகோதரரான இன்பா (சூரி) அக்கா மீது அளவு கடந்த பாசத்துடன் வாழ்ந்து வருகிறார். வளைகாப்பு நிகழ்ச்சி ஒன்றில் கிரிஜாவின் மாமியார் கரித்துக் கொட்ட அவர் மீதே வாந்தி எடுத்து விடுகிறார் கிரிஜா. மருமக மாசமா இருக்கா என்பதை அறிந்ததும் மாமியாரின் கோபம் தணிகிறது. அக்காவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, வயிற்றில் வளரும் குழந்தையிடம் “என்னை பெத்தாரே” என முதல் முறையாக பேசுவது, குழந்தை கொடி சுத்தி பிறந்ததும் மாமனுக்கு ஆகாது என்று பலரும் சொல்லி அனுப்பிவிட அழுது கொண்டிருக்கும் சூரிக்கு மருத்துவரான ஐஸ்வர்யா லட்சுமி அதெல்லாம் மூடப்பழக்கம் என சொல்ல குழந்தையின் அப்பா ரவியை தள்ளிவிட்டு மருமகனை முதல் ஆளாக மடியில் ஏந்தும் காட்சிகள் என படத்தின் ஆரம்பமே ஓவர் பாசமாக செல்கிறது.
தன்னுடைய அப்பாவை போல பெண்களுக்கு மரியாதை கொடுக்கிறாரே என சூரியை மருத்துவரான ஐஸ்வர்யா லட்சுமி காதலிக்கிறார். 5 ஆண்டுகள் ஆகிவிட்டதாக போட்டு மருமகன் நிலனை (பிரகித் சிவன்) காட்டுகின்றனர். மாமாவை விட்டு ஒருபோதும் பிரியாத மருமகனாக வளர்கிறார் நிலன். சூரியின் திருமணத்தில் கூட அத்தைக்கு நான் தான் தாலி கட்டுவேன் என அடம்பிடிக்க அங்கே சூரி செய்யும் விஷயம், முதலிரவில் வந்து மாமாவுடன் படுத்துக் கொள்வது என சிறுவனின் அடத்தின் காரணமாக ஐஸ்வர்யா லட்சுமியின் வாழ்வில் அடிக்கும் புயல் மாமனையும் மருமகனையும் எப்படி பிரிக்கிறது. அக்காவுக்கும் தம்பிக்கும் என்ன நடக்கிறது. கடைசியில் அவர்கள் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பது மீதி கதை.
படம் எப்படி இருக்கு
நடிகர் சூரி மிகச் சிறப்பான நடிப்பை யதார்த்தமான மற்றும் கண் கலங்க வைக்கும் காட்சிகளையும் மிக அருமையாக நகர்த்தி சென்றுள்ளார் கதைய நாயகன்.
மேலும் படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி மிக அழகான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் சூரிக்கும் அவருக்கும் நடக்கும் ரொமான்ஸ் சீன் மிக சிறப்பாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது.
இன்பா கதாபாத்திரத்தில் அக்கா மீதும் அக்கா மகன் மீதும் அளவு கடந்த பாசக்காரனாக நடிகர் சூரி நல்லாவே நடித்திருக்கிறார்.
நடிகை ஸ்வஸ்திகாவின் நடிப்பு யதார்த்தமாக இருந்தாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
மேலும் சிங்கராயராக வரும் ராஜ்கிரண் மற்றும் பவுன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜி சந்திரசேகர் போர்ஷன் மிக நன்றாகவே இருக்கிறது மனதை உருக்க வைத்த காட்சிகள்.
நடிகராக நடித்துள்ள பாபா பாஸ்கர் மாஸ்டர் பாலசரவணன் மற்றும் சிறப்பு கதாபாத்திரமாக விமல் அவர்கள் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அந்த படத்திற்கான வேகத்தை அதிகரித்துள்ளார்.
மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக 6 வயது சிறுவனாக நடித்துள்ள அந்த சிறுவனின் நடிப்பு மிகச் சிறப்பாகவும் அருமையாகவும் அமைந்துள்ளது இது படத்திற்கு கூடுதல் பலமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
பின்னணி இசை மற்றும் பாடல்கள் மிக இருமையாக இருக்கிறது
படத்தின் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் மிகச்சிறப்பான திரைக்கதையை அமைத்துள்ளார். குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் மற்றும் இரண்டாம் பாகம் மிக அருமையாக எடுத்துள்ளார் படம் பார்த்த அனைவரையும் கண்கலங்க வைத்து அரங்கத்தையே அமைதிப்படுத்தி படத்தை வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிளஸ்
சூரி , ராஜக்கிறேன் , ஸ்வஸ்திகா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிப்பு, இசை,கதை களம் மற்றும் திரைக்கதை.
மைனஸ்
முதல் பாதியின் திரைக்கதை.
Rating:3.5/5