News

வித்தியாசமான முறையில் வெளியாகும் மாநாடு பர்ட்ஸ் சிங்கிள் ட்ராக் பாடல் !

Published

on

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துள்ள திரைப்படம் மாநாடு. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படத்தின் முதல் பாடல் ரம்ஜான் தினத்தன்று வெளியாகும் என அறிவிப்பு கொடுத்தது படக்குழு ஆனால் எதிர்பாராத விதமாக இயக்குனர் வெங்கட் பிரபுவின் தாய் காலமானதால் வெளியீட்டை தள்ளி வைத்தனர்.

இந்நிலையில் மாநாடு படத்தின் இசை உரிமையை யுவன் ஷங்கர் ராஜாவின் யு1 ரெக்கார்ட்ஸ் நிறுவனமே வாங்கியுள்ளதாம். அது மட்டுமில்லாமல் இந்த படத்தின் பர்ட்ஸ் சிங்கிள் ட்ராக் இந்த மாதம் 21-ம் தேதி வெளியாகிறது என்று அறிவிப்பும் கொடுத்தது படக்குழு.

இந்த பர்ட்ஸ் சிங்கிள் ட்ராக்கை கொஞ்சம் வித்தியாசமாக வெளியிடயுள்ளதாம் படக்குழு. சமீபகாலமாக டுவிட்டரில் அறிமுகமான ஸ்பேஸ் தளத்தில்தான் இப்பாடலை வெளியிடயுள்ளாதம். அது சம்மந்தமாக இயக்குனர் வெங்கட் பிரபு, சிலம்பரசன், யுவன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் நடிகை கல்யாணி ஆகியோர் கலந்துகொள்ளும் உரையாடலும் உள்ளதாம்.

பாடல் வெளியாகும் அந்த நாளில் ரசிகர்களில் அவர்களிடம் நேரடியாக உடையாடலாம். சமீபத்தில் ஜகமே தந்திரம் விளம்பரத்துக்காக நடிகர் தனுஷ் டுவிட்டர் ஸ்பேஸ் உடையாடலை 17000 பேட் கேட்டது ஒரு சாதனையாக இருக்கிறது. அந்த சாதனையை மாநாடு படக்குழு முறியடிப்பார்களா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending

Exit mobile version