Reviews

Maanaadu – Review !

Published

on

சி ம்பு வெங்கட் பிரபு கூட்டணியில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான “மாநாடு” திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது. பல வித போராட்டங்களுக்கு பிறகு ஒரு வழியாக சிம்புவின் மாநாடு வெளியாகி உள்ளது. இன்று படம் வெளியாகும் என்று போன வாரத்தில் இருந்து புரொமோஷன்கள் நடைபெற்ற நிலையில் கடைசி நேரத்தில் நேற்று மாலை படம் வெளிவராது என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்தார். இது சிம்பு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதன்பிறகு இரவு பெறும் போராட்டங்களுக்கு பிறகு படம் இன்று வெளியானது. ஆனாலும் காலை 5 மணி காட்சிகள் நடைபெறவில்லை. கொட்டும் மழையிலும் திரையரங்கு வந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதன் பிறகு தமிழகம் முழுவதும் 8 மணி காட்சிகள் ஒளிபரப்பு ஆனது.

Movie Details

அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து இருக்கிறார். தனுஷ்கோடி என்ற வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே. சூர்யா நடித்து இருக்கிறார். நண்பனின் காதலை சேர்த்து வைக்க இருக்கிறார். இருந்து இந்தியாவிற்கு திரும்புகிறார் கதாநாயகன் சிம்பு. அங்கு திருமண பெண்ணை கடத்தி தன் நண்பன் பிரேம்ஜிக்கு திருமணம் செய்ய முயற்சிக்கிறார். பின் ஆள் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் மேல் காரை ஏற்றி விடுகிறார் சிம்பு. அப்போது எதிர்பாராத விதமாக எஸ்.ஜே.சூர்யா, சிம்பு சந்திப்பு நடக்கிறது. பின் தான் போட்டு வைத்த எல்லா திட்டத்தையும் சிம்பு கெடுத்து விட்டான் என்று எஸ் ஜே சூர்யா கோபப்படுகிறார்.

மேலும், எஸ்.ஜே.சூர்யா சிம்புவை பழிவாங்க பெரிய திட்டம் தீட்டுகிறார். சிம்புவை வைத்தே முதலமைச்சரை சுட்டுக் கொல்ல திட்டமிடுகிறார். ஆனால், சிம்பு முடியாது என்று சொல்கிறார். அப்போது சிம்பு நண்பர்களை கொன்று விடுவேன் என்று எஸ்.ஜே.சூர்யா சிம்புவை மிரட்டுகிறார். அதில் பிரேம்ஜியை, எஸ்.ஜே.சூர்யா சுட்டு கொன்று விடுகிறார். இதனால் வேறு வழியில்லாமல் முதலமைச்சரை துப்பாக்கியால் சிம்பு சுடுகிறார். உடனே சிம்பு ஒரு இஸ்லாம் என்பதால் மத கலவரத்தை உண்டாக்குகின்றனர். இதன்பின் சிம்புவை போலீஸ் சுற்றி வளைக்கிறது.

அப்போது சிம்புவை போலீஸ் சுட்டுக் கொல்கிறது. ஆனால், சிம்பு சாகவில்லை. இங்கு தான் கதையில் ஒரு மிகப் பெரிய ட்விஸ்ட் . சிம்பு தலையில் துப்பாக்கிக் ட்விஸ்ட் குறிப்பிட்ட ஒரு நாளுக்குள் சிக்கிக்கொண்டு மீண்டும் மீண்டும் அதே நாளில் சிம்பு பயணம் செய்கிறார் . இதனை ஒரு கட்டத்தில் தெளிவாகப் புரிந்து கொள்ளும் சிம்பு என்ன நடக்கிறது? எதற்காக நடக்கிறது? இந்த கலவரத்தை எப்படி நிறுத்துவது? என்பது தான் படத்தின் மீதி கதை. ஒரு புத்தம் புதிய வித்தியாசமான கதைக்களத்துடன் மீண்டும் என்ட்ரி கொடுத்திருக்கிறார் சிம்பு. எப்போதும் போல் இல்லாமல் வெங்கட்பிரபு ஒரு வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு படமாக்கியிருக்கிறார்.

சிம்பு கடினமாக நடித்து வாங்கும் கைதட்டல்களை, வில்லன் எஸ் ஜே சூர்யா தனது ரியாக்சன்கள் மூலமே பெற்று விடுகிறார். அந்த கேரக்டரை வேறு எவராலும் செய்ய முடியாத அளவிற்கு கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் எஸ் ஜே சூர்யா. நான் இளையராஜாவின் வாரிசுடா என்று மீண்டும் ஒரு முறை பின்னணி இசையில் கலக்கி உள்ளார் யுவன் சங்கர் ராஜா.

படத்தில் வரும் கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி, சந்திரசேகர், Y G மகேந்திரன் என்று அனைவரும் சிறப்பாக நடித்து உள்ளனர். குறிப்பாக இரண்டாம் பாதியில் சிம்பு, எஸ் ஜே சூர்யா, Y G மகேந்திரன் மூன்று பேரும் இணைந்து வரும் ஒரு காட்சியில் திரையரங்கமே சிரிப்பலையில் மிதக்கிறது. படம் ஆரம்பம் முதல் முடியும் வரை வந்த காட்சிகளே திரும்ப வந்தாலும் எங்குமே சிறிது கூட சலிப்பு தட்ட வில்லை.

எங்க சார் இவளோ நாளா போனிங்க என்று வெங்கட் பிரபுவை கேட்கும் அளவிற்கு சிறப்பான, சிரிப்பான படத்தை நமக்கு அளித்துள்ளார். படத்தில் ஆங்காங்கே நடப்பு அரசியல் நிகழ்வுகள் வசனங்கள் மூலம் வந்தாலும் துண்டாக தெரியாமல் படத்துடன் நகர்ந்து விடுகிறது. இந்தி திணிப்பு எதிர்ப்பு காட்சிகளும் ஆங்காங்கே இடம் பெறுகிறது.

டைம் லூப் என்ற முறையில் இந்த படம் உருவாகியுள்ளது. தமிழில் இது இரண்டாவது திரைப்படம் கடந்த வாரம் ஜாங்கோ என்ற படம் வெளியானது ஆனால் சுவாரசியமான திரைக்கதையால் இப்படம் வெற்றி படமாகிறது.
Cinetimee

வெங்கட் பிரபு படங்களில் பழைய வெற்றி படங்களை நினைவுபடுத்தும் பல காட்சிகள் படத்தில் வந்துதான் போகிறது. அப்பிடி வந்தாலும் பல காட்சிகள் நமக்கு ரசிக்கும்படிவுள்ளது. விக்ரம் பிரபுவின் அந்த காமெடி கலந்த வசனங்கள் பல இடங்களில் ரசிக்க வைக்கிறது குறிப்பாக ஒரு காட்சியில் எஸ்ஜே. சூர்யாவை குறிப்பிடும் விதமாக அவன் உன்னை விட ஓவரா ஆக்டிங் பண்ணுவான் என்று சிம்பு சொல்லும் வசனத்துக்கு அரங்கமே சும்மா அதிர்ந்தது.

மாநாடு படம் மிகப்பெரிய வெற்றி படமாகிறது என்றால் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும் பின்னணி இசையும் ஒரு மிகப்பெரிய காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை.

எங்க சார் இவளோ நாளா போனிங்க என்று வெங்கட் பிரபுவை கேட்கும் அளவிற்கு சிறப்பான, சிரிப்பான படத்தை நமக்கு அளித்துள்ளார். படத்தில் ஆங்காங்கே நடப்பு அரசியல் நிகழ்வுகள் வசனங்கள் மூலம் வந்தாலும் துண்டாக தெரியாமல் படத்துடன் நகர்ந்து விடுகிறது.


மொத்தத்தில் மாநாடு கூட்டம் கூடும்

Trending

Exit mobile version