News

பத்திரிக்கையாளன் தனுஷுக்கு அரசியல்வாதிக்கும் நடக்கும் மோதல் மாறன் !

Published

on

இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் மாறன். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். வில்லனாக சமுத்திரக்கனி நடிக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.

இந்து காலை மாறன் படத்தின் புதிய புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. தற்போது இப்படத்தின் கதை பற்றி சில தகவல்களும் கசிந்துள்ளது.

படத்தின் தனுஷ் ஒரு பத்திரிக்கையாளராக நடிப்பதாகவும் அவருக்கும் அரசியல்வாதியான சமுத்திரக்கனிக்கும் இடையே ஏற்படும் மோதலும் அதனால் ஏற்படும் பிரச்சனைகளுமே படத்தின் ஒட்டுமொத்த கதையாம்.

Trending

Exit mobile version