இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிஸ்ட் ஆக இருப்பவர் தனுஷ் நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் சமுத்திரக்கனி மின்னணு வாக்குப் பதிவு இயத்திரத்தை பயன்படுத்தி செய்யவிருக்கும் தில்லு முல்லு வேலைகளை உலகிற்கு காட்டுகிறார்.
இந்த நிலையில் தனுஷின் தங்கையான ஸ்ம்ருதி வெங்கட்டை அடையாளம் தெரியாத சிலர் கடத்தி கொலை செய்துவிடுகிறார்கள். தன் தங்கையை கொலை செய்தது சமுத்திரக்கனிதான் என்று சந்தேகப்படும் தனுஷ் அது பற்றி விசாரிக்க ஆரம்பிக்கிறார். இறுதியில் கொலை செய்தது யார் என்பதை கண்டு பிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
இது போன்ற கதைகளை தமிழ் சினிமாவில் பல கோடி முறை பார்த்துவிட்டோம் ஆனால் இது போன்ற ஒரு உணர்வுகள் இல்லாத கதையை நம்மால் இதுவரைக்கும் பார்த்திருக்கவே முடியாது.
அரசுரன் படத்தில் எப்படி நடித்த தனுஷா இது என்று கேட்கும் அளவிற்கு ஒரு நடிப்பு இந்த கதைக்கு இந்த நடிப்பே போதும் என்று நினைத்து விட்டார் போல தனுஷ் ஏனோ தானோ என்று நடித்து கொடுத்துள்ளார்.
நடிகை மாளவிகா மோகனன் படத்திற்க்கு ஒரு கதா நாயகி வேண்டும் அல்லவா அதற்க்குதான் இவர். காதல் காட்சி இல்லை, டூயட் இல்லை.
தங்கையாக வரும் ஸ்ம்ருதி வெங்கட் அவருக்கும் ஒன்றும் வித்தியாசமன வேடம் இல்லை வழக்கமான தங்கை கதாப்பாத்திரம்.
Cinetimee
தனுஷ் வீட்டின் முன் 20 வருடமாக அயன் கடை வைத்திருக்கும் தனுஷ் மாமா ஆடுகளம் நரேன் கெளதம் மேனன் போல ஆங்கிலம் கலந்து பேசுவதை போல வைத்து அவரையும் பழி வாங்கியுள்ளார் கார்த்திக் நரேன்.
படத்தின் வில்லனாக வரும் முன்னாள் அமைச்சர் சமுத்திரக்கனி இன்னும் எத்தனை எத்தனை படங்களுக்கு இது போன்ற வேடம் போதும் சாமி. படத்தில் டுவிஸ்ட் வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அமீரை நடிக்க வைத்துள்ளார் கார்த்திக் நரேன் நல்லா வச்சிங்க டுவிஸ்ட்.
ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் சொல்லும் அளவிற்கு ஒன்றுமே இல்லை.