Connect with us
 

Reviews

மாயோன் – விமர்சனம்

Published

on

யக்குநர் கிஷோர் இயக்கத்தில் தொல்லியல் துறை கோயில் பின்னணியில் புதையலை தேடி நடக்கும் ஒரு திரைக்கதை. கண்டிப்பாக இது போன்ற படம் தமிழ் சினிமாவிற்கு புதுமைதான்.

Movie Details

மாயோன் என்ற பழங்கால கிருஷ்ணர் கோயிலை இந்திய தொல்லியல் துறை தனது கட்டுப்பாட்டில் வைத்து ஆராய்ச்சி செய்கிறது. அந்த ஆராய்ச்சியின் தொல்லியல் துறை அதிகாரியாக கே.எஸ்.ரவிக்குமார் வருகிறார்.

இவரின் கீழ் பணிபுரியும் சிபி சத்யராஜ் மற்றும் ஹரிஷ் பெரடி அந்த கோயிலில் இருக்கும் ஒரு ரகசிய அறையில் புதையல் இருப்பதை அறிந்து அதை எடுத்து வெளி நாட்டிற்கு விற்பனை செய்ய நினைக்கிறார்கள்.

அந்த எங்கு இருந்து வந்தது என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்து அதை கண்டுபிடிக்க தன்யா ரவிச்சந்திரன், பகவதி பெருமாள் ஆகியோர் ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார்கள். இறுதியில் அதை கண்டு பிடித்தார்களா இல்லையா? அந்த புதையலை வெளிநாட்டுக்கு கடத்தி சென்றார்களா என்பதுதான் படத்தின் கதை.

தொல்லியல் துறையில் ஆராய்ச்சியாளராக பணிபுரியும் சிபிராஜ் ஒரு பழங்கால பொருளை பார்த்த அடுத்த நிமிடமே அதன் விபரங்களை கூறும் திறன் படைத்தவர். தான் ஏற்றுக்கொண்ட அந்த கதாப்பாத்திரத்தை முழுமையாக தன் நடிப்பையும் அர்ப்பணிப்பையும் கொடுத்துள்ளார் சிபிராஜ்.

சிபிராஜின் ஜோடியாக வரும் தன்யா ரவிச்சந்திரன். இவருக்கு பெரிதாக முக்கியதுவம் இல்லை.

படத்தில் கிராபிக்ஸ் மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். அதே முக்கியத்துவத்தை நடிகர் சிபிராஜ் அவர்களுக்கு கொடுத்திருந்தால் கண்டிப்பாக படத்தை நன்றாக நடித்திருக்கலாம்.
Cinetimee

படத்தின் வில்லனாக வரும் ஹரிஷ் பெரடி சுமாரான வில்லத்தனம். தொல்லியல் துறை அதிகாரியாக வரும் கே.எஸ்.ரவிக்குமார் மாயோன் கிராமத்து தலைவராக வரும் ராதாரவி என அனைவரும் சிறப்பான நடிப்பு.

இசைஞானி இளையராஜாவின் இசை மற்றும் பின்னணி இசை படத்தின் பக்க பலமாக அமைந்துள்ளது. கோயிலை பல வகையான கோணங்களில் எடுத்து வியக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராம்பிரசாத்.

திரைக்கதையில் இன்னும் அழுத்தமாகவும் மேக்கிங்கில் இன்னும் பிரம்மாண்டத்தையும் படத்தில் வரும் கிராபிக்ஸ் மற்றும் வி.எப்.எக்ஸ் காட்சிகளில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலித்தியிருந்தால் இந்த படத்தை தமிழ் சினிமா நிச்சயமாக கொண்டாடி இருக்கும் அதை படக்குழு தவறவிட்டுவிட்டது.


மொத்தத்தில் மாயோன் மாய உலகத்தை இன்னும் பிரம்மாண்டமாக காட்டியிருக்கலாம் படக்குழு.