Reviews
மதகஜராஜா – விமர்சனம் !
Cast: Vishal, Anjali, Varalaxmi Sarathkumar, Santhanam, Late Mano bala, Sonu Sood
Production: Akkineni Manohar Prasad, Akkineni Anand Prasad.
Director: Sundar C
Cinematography: Richard M. Nathan
Editing: Praveen K. L, N. B. Srikanth
Music: Vijay Antony
Language: Tamil
Runtime: 2H 13 Mins
Release Date: 12 January 2025
சுமார் 10 ஆண்டுகள் கழித்து வெளியாகிறது மதகஜராஜா. 90ஸ், 2கே வைபில் வந்திருப்பது தான் மதகஜராஜா படத்தின் பெரிய பலமே.
கதையில் புதுமையை எல்லாம் தேட வேண்டாம். மதகஜராஜா என்கிற எம்.ஜி.ஆர். என்கிற ராஜாவை (விஷால்) சுற்றியே கதை நகர்கிறது. கேபிள் நெட்வொர்க் வைத்திருக்கும் ராஜா தன் சிறுவயது நண்பர்களான சந்தானம், சடகோபன் ரமேஷ் மற்றும் நிதின் சத்யா ஆகியோரை ஒரு திருமண நிகழ்ச்சியில் சந்திக்கிறார். தன் நண்பர்களில் சடகோபம் ரமேஷ் மற்றும் நிதின் சத்யாவுக்கு அதிகாரம் படைத்த மீடியா அதிபரான சோனு சூதால் பெரிய பிரச்சனை இருப்பதை தெரிந்து கொள்கிறார் விஷால். சோனு சூதை எதிர்த்து தன் நண்பர்களின் பிரச்சனையை தீர்த்து வைக்க முடிவு செய்கிறார்.
படம் எப்படி இருக்கு
முதல் பாதியில் ஒரு சாதாரண ஆள் மற்றும் கிங்மேக்கருக்கு இடையேயான பிரச்சனையை காட்டியிருக்கிறார்கள். தூள் படம் மாதிரி ஒரு பிரச்சனை. ஆனால் தூள் மாதிரி சீரியஸாக இல்லாமல் இதில் காமெடியாக இருக்கிறது.
ஆனால் தூள் ஃபீலிங் வருகிறது. பல குடும்பங்கள் வசிக்கும் ஒரு பகுதி. பாவாடை, தாவணியில் ஹீரோயின். அடல்ட் காமெடிக்காக கிளாமராக ஒரு நடிகை. ஆட வைக்கும் விஜய் ஆண்டனியின் பாடல்கள். ஃபுல் ஃபார்மில் இருக்கும் காமெடியன். ஆனால் சுந்தர் சி. எல்லாத்தையும் ஜாலியாக கையாண்டிருக்கிறார்.
சந்தானத்தின் ஒன்லைனர்கள் படத்திற்கு பெரிதும் கை கொடுத்திருக்கிறது. அவர் தன் மாமியாரை கிண்டல் செய்வதை பார்த்து தியேட்டரில் சிரிக்காதவர்களே இல்லை. யாரும் எதிர்பார்க்காத ஒருவர் கவுரவத் தோற்றத்தில் வந்திருக்கிறார்.
விஷால், சோனு சூத் இடையேயான மோதல் பெரிதாக இல்லையென்றாலும் . விஷால், சோனு சூத் இடையே நடக்கும் கேம் நன்றாக இருக்கிறது .
ஆங்காங்கே காமெடி வைத்து மக்களை சிரிக்க வைக்கிறார் சுந்தர் சி. மறைந்த மனோபாலா வரும் காட்சியில் திரையாராகமே ஒரே சிரிப்பு சத்தம் தான்.
காமெடி ,காமெடியுடன் ரொமான்ஸ், ஆக்ஷன் கலந்து சரவெடி போல் கொடுத்திருக்கிறார் சுந்தர் சி.
பிளஸ்
சுந்தர் சி திரைக்கதை ,சந்தனம் காமெடி வெடி ,விஷால் ஆக்ஷன்
மைனஸ்
வில்லன்
மொத்ததில் மதகஜராஜா – காமெடி சரவெடி பொங்கல் ட்ரீட்.
Rating 4.5/5