News
ராகவா லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ் படத்தில் வில்லனாக மாதவன் !
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் பென்ஸ் படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார். LCU-வின் ஒரு பகுதியாக இப்படமும் உருவாகி வருகிறது.
சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமியுடன் இணைந்து லோகேஷ் கனகராஜூம் இப்படத்தை தயாரித்து வருகிறார்கள். அதிரடி ஆக்சன் படமாக உருவாகி வருகிறது.
இந்த நிலையில் இப்படத்தில் வில்லனாக நடிக்க பல முன்னணி நடிகர்களிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வந்த நிலையில் நடிகர் மாதவன் தற்போது ஒப்பதமாகியுள்ளார். இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.