Connect with us
 

News

தளபதி விஜய்யை வைத்து விளம்பரம் தேடும் மதுரை ஆதீனம் !

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜயின் படங்களை யாரும் பார்க்க வேண்டாம் என மதுரை ஆதீனம் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை பழங்காநத்தம் என்ற பகுதியில் நடைபெற்ற விஷ்வ இந்து பரிஷித் சார்பில் துறவிகள் மாநாடு நடைபெற்றது.

அப்போது பங்கேற்று பேசிய ஆதீனம் நடிகர் விஜய் நடிக்கும் படங்கள் அனைத்தும் இந்து மதங்களை அவமதிப்பதாக இருக்கும் காட்சிகள் அதிகமாக இருப்பதால் அவரது படங்களைப் பார்க்க வேண்டாம் என கூறியுள்ளார். கடவுளை இழிவு படுத்தி பேசுபவர்களை எதிர்த்தால் என்னை சங்கி என்று சொல்வதாக கூறினார்.

இந்நிலையில் சாலமன் பாப்பையாவுக்கு பல்லக்குத் தூக்கும் போது தருமபுரம் ஆதீனத்திற்கு ஏன் பல்லக்கு தூக்க கூடாது என கேள்வி எழுப்பியுள்ளார். இந்துக்களை அவமதிப்பை அதற்கான வசனங்கள் திரைப்படத்தில் அதிகமாகப் பேசும் நடிகர் என்றால் விஜய் என்றும் இதனால் அவரது படத்தை பார்க்க வேண்டாம் என மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.

மதுரை ஆதீனத்திற்கு விஜய் ரசிகர்கள் உட்பட பலர் கண்டனங்கள் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஆதீனங்கள் அரசியல் பேசாமல் வேறு யார் பேசுவது என்றும் அரசியல்வாதிகளுக்கு கோவிலில் என்ன வேலை? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.