Connect with us
 

Reviews

Mafia

Published

on

Cast: Arun Vijay, Priya Bhavani Shankar, Prasanna.
Production: Lyca Productions
Director: Karthick Naren
Editor: Sreejith Sarang
Cinematography: Gokul benoy
Music: Jakes Bejoy
Language: Tamil
Censor : U/A
Runtime : 1Hrs 53 Mins
Release Date : 21st February 2020

2016 வெளியான துருவங்கள் பதினாறு படம் மூலமாக அறிமுகமான இளம் இயக்குனர் கார்த்திக் நரேன். மீண்டும் ஒரு விறுவிறுப்பான ஆக்சன் கதையை படமாக்கியிருக்கிறார்.

தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடிக்கிறார் அருண் விஜய். அந்தவகையில் “மாபியா” அருண் விஜய்யின் கேரியரில் வித்தியாசமான சிறப்பான படமாக அமைந்துள்ளது.

ஆரம்பக் காட்சியில் ஹோட்டலில் துப்பாக்கி சூட்டுடன் மாபியா படம் தொடங்குகிறது. போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரியாக வரும் ஆர்யன் (அருண் விஜய்) . அவருடைய டீமில் சத்யா (பிரியா பவானி சங்கர்) மற்றும் ஒரு இளைஞர்.சென்னையில் முக்கியமான இடங்களில் மாணவர்களிடம் போதை பழக்கத்தை கண்டறிகிறார்கள்.

போதைப் பொருள் பயன்படுத்தும் சிலரை பிடிக்கிறார்கள். இந்நிலையில் சமூக ஆர்வலரான முகிலன் (தலைவாசல் விஜய் )மற்றும் அருண் விஜய்யின் உயர் அதிகாரி கொலை செய்யப்படுகிறார்கள்.

இந்த கொலைகளுக்கு காரணம் தொழிலதிபர் திவாகர்(பிரசன்னா) தான் என்பதை அருண்விஜய் கண்டுபிடிக்கிறார். பிரசன்னா தான் டிரக் மாபியாவின் தலைவர் என்பதை கண்டுபிடிக்கும் போது கதை விறுவிறுப்பாக ஆரம்பமாகிறது.

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார் அருண்விஜய். போலிஸ் கதாபாத்திரத்திற்கு ஏற்றது போல் தோற்றம் மற்றும் நடிப்பு என அனைத்திலும் அசத்தி இருக்கிறார் அருண் விஜய்.

ஹீரோயினாக வரும் ப்ரியா பவானி சங்கர் அருண் விஜயின் உதவியாளராக வருகிறார்.தமிழ் சினிமாவில் வருவது போல் சில காட்சிகளுக்கு மட்டும் வரும் ஹீரோயின் கதாபாத்திரம் இல்லாமல் சண்டை காட்சிகள் மற்றும் கன் ஷூட் போன்ற இடங்களில் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

இயக்குனர் கார்த்திக் நரேனின் வித்தியாசமான திரைக்கதை மற்றும் கிளைமாக்ஸில் யாருமே எதிர்பாராத திருப்புமுனை. அவர் ஸ்டைலில் கொடுத்து மாபியா இரண்டாம் பாகத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கிறார்.

ஜேக்ஸ் பிஜாய் பின்னணி இசை படத்துக்கு பல இடங்களில் பலம் சேர்த்திருக்கிறது. கோகுல் பெனாய் ஒளிப்பதிவு படம் ஸ்டைலிஷாக ஹாலிவுட் தரத்திற்கு எடுக்கப்பட்டிருக்கிறது. நேர்த்தியான கலை என அனைத்து டெக்னீசியன்கள் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள்.

பிளஸ்: படத்தின் பின்னணி இசை, கலை மற்றும் ஒளிப்பதிவு
படத்தின் இரண்டாம் பாதியில் விறுவிறுப்பான திரைக்கதை.
யாருமே எதிர்பார்த்திராத கிளைமாக்ஸ் படத்தின் முக்கியமான பிளஸ்.

மைனஸ்: படத்தின் முதல்பாதி இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக கொடுத்திருக்கலாம்.

மொத்தத்தில் ‘மாஃபியா’ ரசிகர்கள் மனதை கவர்ந்து விட்டான்.

Review By : Saranya

Continue Reading