News

மகாமுனி படம் இங்கிலாந்து பட விழாவில் 9 பிரிவுகளில் போட்டி !

Published

on

சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா, இந்துஜா, மகிமா நம்பியார் ஆகியோரின் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் மகாமுனி. இதில் ஆர்யா இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். திகில் கதையம்சம் கொண்ட படமாக வெளியான இந்த திரைப்படம். வசூலிலும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படம் ஏற்கனவே பல சர்வதேச பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை வென்றுள்ளது. மகிமா நம்பியாருக்கு மேறிக் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த துணை நடிகைக்கான விருது கிடைத்தது.

இந்த நிலையில் இங்கிலாந்தில் நடைபெவுள்ள சர்வதேச திரைப்பட விழாவில் மகாமுனி படம் 9 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சிறந்த நடிகர் – ஆர்யா
சிறந்த நடிகை – இந்துஜா
சிறந்த துணை நடிகை – மகிமா நம்பியார்

மற்றும் சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த வெளிநாட்டு படம் உள்பட மொத்தமாக 9 பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

அனைவருக்கும் படத்தின் இயக்குநர் சாந்தகுமார் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் சர்வதேச திரைப்பட விழா அடுத்த மாதம் 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

Trending

Exit mobile version