Connect with us
 

Reviews

Mahaan – Movie Review !

Published

on

வி க்ரம் மற்றும் துருவ் நடிப்பில் வெளியாகி உள்ள படம் மகான். இந்த படத்தில் அப்பா-மகன் இருவருமே கதாநாயகர்களாக நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் இவர்களுடன் வாணிபோஜன், பாபி சிம்ஹா, சிம்ரன், தீபக் பரமேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து இருக்கிறது. மேலும், இந்த படம் ஆக்ஷன் நிறைந்த கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி உள்ளது. படத்தில் சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பாளராக பணிபுரிந்துள்ளார்.

Movie Details

சுதந்திரப்போராட்ட குடும்பத்தில் பிறக்கும் காந்தி மகான் சிறுவயதிலிருந்தே மதுவுக்கு எதிரான தீமைகளை சொல்லி வளர்க்கப்படுகிறான். இருந்தும் ஒரு கட்டத்தில் மது விற்பனை செய்யும் தொழிலுக்கு தள்ளப்படுகிறார். அவரது மகன் தாதாபாய் நௌரோஜி ஒரு ஐபிஎஸ் அதிகாரி. இதனால் அப்பா-மகன் இருவருக்கும் பிரச்சனை வருகிறது. கடைசியில் தனது மகனை காந்தி மகான் எப்படி சமாளித்தார்? மது விற்பனையில் இருந்து காந்திமகான் விலகினாரா? தன் தந்தைக்கு தண்டனை வாங்கி கொடுத்தாரா? என்பது மகான் படத்தின் மீதி கதை. ‘தவறு செய்ய அனுமதிக்காத சுதந்திரம் சுதந்திரமே இல்லை’ என்ற காந்தியின் வசனத்துடன் தான் படம் துவங்குகிறது.

மேலும், படத்தில் காந்தி மகான் ஆக விக்ரம், தாதாபாய் நௌரோஜி கதாபாத்திரத்தில் துருவ், சத்யவானாக பாபி சிம்மா நடித்து இருக்கிறார்கள். அப்பா, மகனுக்கு இடையேயான மோதல் விறுவிறுப்பை கொண்டு சென்றிருக்கின்றது. கடைசியில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்ற சுவாரசியமான கதையை மூன்று மணிநேர திரைப்படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர். வழக்கமான கதை .தான் கார்த்தி சுப்புராஜ் கையாண்டிருக்கிறார் இந்த படம் முழுக்க முழுக்க ஆயிரத்து 1960, 1993, 2013 2016 என்று ஒவ்வொரு காலங்களுக்கு ஏற்ப கதை நகர்கிறது. இருந்தும் ஒவ்வொரு காலகட்டத்தையும் நேர்த்தியாக இயக்குனர் காண்பித்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்று.

வாழ்க்கையில் காந்தி மகானின் கொள்கைகளைப் பின்பற்றி வாழவேண்டும் என்ற லட்சியத்துடன் வாழும் ஆடுகளம் நரேன் மகனான விக்ரம், தனது நாற்பது வயது வரை காந்திய கொள்கைகளை பின்பற்றி வாழ்ந்து வருகிறார். காந்தியக் கொள்கைகளை பின்பற்றும் சிம்ரனை மணந்து, அமைதியான வாழ்க்கையில் இருந்த அவர் தனது நாற்பதாவது வயதில் குடிக்க வேண்டும் என ஒரு முறை முயற்சித்து பார்க்க இதன் காரணமாக சிம்ரன் மற்றும் அவரது மகனை பிரிகிறார்.

குடிக்கும் பொழுது அறிமுகமாகும் பால்ய சினேகிதன் பாபி சிம்ஹாவுடன் மீண்டும் நட்பு ஏற்பட்டு மது தயாரிப்பில் தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி அதன் ராஜாவாக வசித்து வரும் விக்ரம், படத்தின் இரண்டாவது பாதியில் பிரிந்து சென்ற தனது மகன் காவல் துறை அதிகாரியாகி வந்து அவரது சாம்ராஜ்யத்தை சிதைக்கும் போது தனது சொந்த மகனை எப்படி எப்படி எதிர்கொள்கிறார் என்பதை சுவாரசியமாக சொல்ல முயற்சி செய்துள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்.

ஏறத்தாழ 20 ஆண்டுகள் இடைவெளியில் நடைபெறும் கதையில் கதைக்கு தகுந்தார் போல விக்ரம் உடல் எடையை கூட்டி குறைத்து நடித்துள்ளது மீண்டும் ஒருமுறை ஆச்சரியப்படுத்தியுள்ளது. பாபி சிம்ஹாவுடன் இணைந்து விக்ரம் சாராய சாம்ராஜ்ஜியத்தின் மூடிசூடா மன்னனாக உருவாகும் காட்சிகளில் அழுத்தம் இல்லாததால் படத்தின் முதல் பாதி சற்று பொறுமையாக நகர்ந்தாலும், துருவ் விக்ரம் அறிமுகமான பின்னர் கதையில் சுவாரசியம் எடுப்பதால் படத்தின் இரண்டாவது பாதி படத்திற்கு மாபெரும் பலமாக அமைந்துள்ளது. ஆதித்ய வர்மா திரைப்படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை காட்டிலும் மகான் திரைப்படத்தில் வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்துள்ளதால் அதனை சரியாக பயன்படுத்தி விக்ரமுடன் போட்டிபோட்டு துருவ் நடித்துள்ளது அவரின் நடிப்பாற்றலுக்கு நல்ல முகவரி தந்துள்ளது.

இரண்டாவது பாதியில் விக்ரமும் துருவ் விக்ரமும் மோதிக்கொள்ளும் சண்டைக் காட்சி படத்தின் ஆகச்சிறந்த காட்சியாக உருவாகியுள்ளது.
Cinetimee

படம் முழுக்க சந்தோஷ் நாராயணனின் இசை ஒரு சில இடங்களில் படத்திற்கு பலமாகவும் அதுவே ஒரு சில இடங்களில் பலவீனமாகவும் அமைந்துள்ளது. ஒளிப்பதிவு இசைக்கோர்வை என படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் படத்தின் தொழில்நுட்பக் குழு அமைந்துள்ளது, மகான் திரைப்படத்தை நல்ல திரைப்படத்தை பார்க்கும் அனுபவத்தை ஏற்படுத்தி கொடுக்கிறது.

திரையரங்குகளில் வெளியாகி இருந்தால் துருவ் விக்ரம் மக்கள் மத்தியில் மேலும் பரிட்சயமாக உதவி செய்திருக்கும். ஆனால் அது நேரடியாக ஓடிடியில் வெளியானது அவருக்கு சற்று ஏமாற்றம் என்றாலும், படம் பார்க்கும் அனுபவத்தை மேலும் சுவாரசிய படுத்தும் ஒரு திரைப்படமாகவே மகான் திரைப்படம் அமைந்துள்ளது.

படத்தின் இரண்டாவது பாதி அளவிற்கு, முதல் பாதியிலும் திரைக்கதையில் இயக்குனர் சிரமம் எடுத்து உழைத்து இருந்தால், விக்ரம் வேதா அளவிற்கு தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த திருடன் போலீஸ் கதையாக உருவாகி, கார்த்திக் சுப்புராஜின் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக மகான் திரைப்படமும் மாறி இருக்கும்


மொத்தத்தில் மகான் தந்தை மகனின் வெறியாட்டம்.