News
விஜய் ஆண்டனி நடிக்க இருந்த கதைதான் மகாராஜா !

இயக்குநர் நித்திலன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்திருக்கும் திரைப்படம் மகாராஜா. இப்படம் விஜய்சேதுபதிக்கு 50வது படமாகும்.
இப்படம் ஜூன் 13ம் தேதி வெளியிட படக்குழு வெளியிட திட்டமிட்டு வேலைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை பெற்று வருகிறது.
இந்த நிலையில் இப்படம் பற்றி பேசியுள்ள தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில் ‘ இந்த கதையை முதலில் நான் தயாரிக்க விஜய் ஆண்டனி நடிப்பதாகத்தான் இருந்தது. ஆனால் இயக்குநர் நித்திலன் ஏற்கனவே பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்திடம் இருந்து முன் பணம் வாங்கியிருந்தார். அதனால் அந்த நிறுவனம் தடையில்லா சான்றிதழ் தர மறுத்து விட்டனர். அதனால்தான் என்னால் இப்படத்தை தயாரிக்க முடியவில்லை என கூறினார்.