Connect with us
 

News

தளபதி 66 படத்தில் விஜய்க்கு மகளாக மகேஷ் பாபுவின் மகள் !

Published

on

நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் தற்போது நடித்து வரும் விஜய் தற்போது இப்படத்தின் இறுதிக்கட்டதில் உள்ளனர். விஜய் நடிக்கும் ஒரு படம் முழுமையாக நடித்து முடித்த பின்னரே அடுத்த படத்தின் அறிவிப்பை கொடுக்கும் விஜய் இந்த முறை 65-வது முடிவதற்குள் தனது 66-வது படத்தின் அப்டேட்டை கொடுத்துள்ளார்.

விஜய்யின் 66-வது படத்தை பல இயக்குநர்க்கள் போட்டி போட்டனர் ஆனால் விஜய் தேர்வு செய்தது தெலுங்கு இயக்குநர் வம்சி. கார்த்தி நடிப்பில் வெளியான தோழா படத்தை இயக்கியவர் வம்சி அதோடு தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் மகரிஷி படத்தையும் இயக்கிய வெற்றி பட இயக்குநர் வம்சி.வம்சி மகேஷ் பாபுவின் ஆஸ்தான இயக்குநர் ஆவார்

தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் எஸ்.தமன் இப்படத்திற்கு இசையமைக்கிரார். தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் நானியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இப்படத்தில் வில்லன் வேடத்தில் நடிப்பதற்கு. வழக்கமாக அதிரடி ஆக்‌ஷன் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் தளபதி விஜய் இந்த படத்தின் மூலம் முழுக்க முழுக்க குடும்பம், பாசம் என ஒரு செண்டிமெண்ட் படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்தநிலையில் இப்படத்தில் நடிக்க மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா விஜய்க்கு இப்படத்தில் நடிக்கவுள்ளதாகவும் அதற்காக பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது