Connect with us
 

News

காதலர் தினத்தில் வெளியாகும் பீஸ்ட் படத்தின் மேக்கிங் வீடியோ?

Published

on

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’ விஜய்யுடன் பூஜா ஹெக்டே, யோகி பாபு, செல்வராகவன், விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உட்பட பலர் நடித்துள்ளார்.

ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்துள்ளது. தமிழ் புத்தாண்டு தினத்தில் இந்தப்படம் திரைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தின் ஒப்பனிங் பாடலை அனிருத் இசையில் எழுதியிருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்த பாடலின் மேக்கிங் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அதில் விஜய், நெல்சன், அனிருத், சிவகார்த்திகேயன் ஆகியோர் தோன்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோ காதலர் தினத்தையொட்டி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம் என்று கூறப்படுகிறது.