Connect with us
 

Reviews

மகாராஜா – விமர்சனம் !

Published

on

Cast: Vijay Sethupathi, Anurag Kashyap, Natty, Bharathiraja, Abhirami, Mamta Mohandas, Singampuli
Producer: Sudhan Sundaram, Jagadish Palanisamy
Director: Nithilan Saminathan
Screenplay: Nithilan Saminathan, Raam Murali
Cinematography: Dinesh Purushothaman
Editing: Philomin Raj
Music: B Ajaneesh Loknath
Language: Tamil
Runtime: 2H 22 Mins
Release Date: 14 June 2024

இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, அனுராக் காஷ்யப், நட்டி நட்ராஜ் மற்றும் மம்தா மோகன்தாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் மகாராஜா.

முடி திருத்தும் வேலை பார்த்து வருகிறார் விஜய்சேதுபதி. ஒரு விபத்தில் அவரின் மனைவி நடிகை திவ்யபாரதி இறந்து போகிறார். தன் மகளுடன் வாழ்ந்து வருகிறார் விஜய்சேதுபதி.

இன்னொரு பக்கம் திருட்டு வேலையை செய்து வரும் அனுராக் காஷ்யப் திருடி விட்டு அந்த வீட்டில் இருக்கும் பெண்களை கற்பழித்து கொலை செய்து வருகிறார்.

ஒரு நாள் விஜய்சேதுபதி காவல் நிலையத்திற்கு சென்று தன் லட்சுமியை காணவில்லை என புகார் கொடுக்கிறார். ஆரம்பத்தில் அந்த புகாரை விசாரிக்க மறுக்கிறார் இன்ஸ்பெக்டர் நட்டி ஆனால் தன் லட்சுமியை கண்டு பிடித்து கொடுத்தாள் ரூ.5 லட்சம் கொடுப்பதாக கூறுகிறார் விஜய்சேதுபதி. அதன் பின்னர் லட்சுமியை தேட ஆரம்பிக்கிறார் நட்டி அதன் பின்னர் பல திடுக்கிடும் திருப்பங்கள் நடக்கிறது. அதன் பின்னர் என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக்கதை.

மகாராஜா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள விஜய்சேதுபதி ஒரு ஒரு காட்சியிலும் ஒரு மகாராஜாவாகவே தெரிகிறார். ஒரு தரமான வெற்றி படத்தை கொடுத்தே ஆகவே வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் விஜய்சேதுபதி இப்படத்தில் மெனக்கெட்டு தன் கடின உழைப்பை கொடுத்துள்ளார்.

அனுராக் காஷ்யப், அபிராமி, மம்தா மோகன்தாஸ் பாரதிராஜா நட்டி, சிங்கம் புலி பாய்ஸ் மணிகண்டன் முனிஷ்காந்த் என தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை மிக கச்சிதமாக திரையில் வெளிக்காட்டியுள்ளார்கள்.

குரங்கு பொம்மை படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் கவனிக்கப்படும் இயக்குநர் ஆனார் நித்திலன் சுவாமிநாதன். வித்தியாசமான கதை டிவிஸ்ட் திரைக்கதைகளையும் இயக்குவதில் நான் எப்போதும் மகாராஜா என்பதை இப்படத்தின் மூலம் நிரூபித்துள்ளார்.

அஜனீஷ் லோக்நாத் இசையில் வரும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். படத்தில் ஒரே ஒரு பாடல் என்றாலும் அதுவும் படத்தின் இடை இடையே வருகிறது.

படத்தின் மிகப்பெரிய பலம் என்றால் நடிகர்களின் தேர்வு திரைக்கதை வடிவமைப்பு இரண்டாம் பாதியை இயக்கிய விதம். குறிப்பாக சிங்கம் புலியை பயன்படுத்திய விதம் என படத்தில் அனைத்துமே பலமாக இருக்கிறது.

படத்தின் முதல் பாதி ஒன்றுமே புரியாமல் இருக்கிறது பிட்டு பிட்டாக திரைக்கதை வருகிறதோ என்று தோன்றுகிறது. அனுராக் காஷ்யப்பின் டப்பிங் மிகப்பெரிய பிரச்சனை இவர் ஒன்று பேச டப்பிங்கில் வேறு ஒன்று வருகிறது.

மொத்தத்தில் மகாராஜா தமிழ் சினிமாவில் ஒரு மாஸ்டர் பீஸ் படமாக அமைந்துள்ளது.

Rating : 4/5