News

தொடர்ந்து நயன்தாராவை கேலி செய்து வரும் மாளவிகா மோகனன் !

Published

on

தமிழில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் மாளவிகா மோகனன். இவர் சமீப காலமாக நடிகை நயன்தாராவை மறைமுகமாக விமர்சித்து வருகிறார். முன்னதாக ராஜா ராணி படத்தில் நயன்தாரா நடித்த ஒரு காட்சியை குறிப்பிட்டு அதில் நயன்தாரா போட்டுள்ள மேக்கப் பற்றி பேசி இருந்தார். அதாவது யாராவது சாகும் போது கூட மேக்கப் போட்டு நடிப்பாங்களா என பேசியிருந்தார்.

அதற்கு பதில் கொடுத்த நயன்தாரா அது ஒரு கமர்சியல் படம் எனவே அதற்கு அப்படித்தான் நடிக்க வேண்டும். ஒரு நடிகையின் தொழில் என்ன இயக்குநர் சொல்வதை திரையில் கொண்டு வருவது அதைதான் நான் செய்தேன். மருத்துவமனை காட்சி என்றால் தலையை விரித்து போட்டு நடிக்க முடியாது என பதிலடி கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது பேச்சி ஒன்றில் நயன்தாராவை அனைவரும் லேடி சூப்பர் ஸ்டார் என செல்லமாக அழைப்பது உண்டு தற்போது அதை சாடி பேசியிருக்கிறார். இது பற்றி மாளவிகா மோகனன் பேசியதாவது : கதாநாயகிகளை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைப்பது எனக்கு பிடிக்காது. நடிகர்களை சூப்பர் ஸ்டார் அழைப்பது போலவே நடிகைகளையும் அழைக்கலாம். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோனே, கத்ரினா கைப், அலியாபட் ஆகியோரை யாரும் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைப்பது இல்லை.

நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைப்பது மாளவிகா மோகனனுக்கு நன்றாகவே தெரியும் அந்த பொறாமையில்தான் மாளவிகா மோகனன் இப்படி தெரிவித்துள்ளார். என வலைத்தளத்தில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஏன் உங்களுக்கு இந்த பொறாமை மாளவிகா மோகனன் என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

Trending

Exit mobile version