Connect with us
 

News

மீண்டும் மாஸ்டர் பட குழுவினருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் !

Published

on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் மாஸ்டர். விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி வில்லனாக மிரட்டினார். விஜய்க்கு ஜோடியாக மாளாவிகா மோகனன் நடித்திருந்தார்.

சமீபத்தில் அளித்த பேட்டியில் மாஸ்டர் படக்குழுவினருடன் மீண்டும் இணைய மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் மாளாவிகா மோகனன்.

தளபதி விஜய்யுடன் நான் நடித்த முதல் திரைப்படம் மாஸ்டர். விஜய் போன்ற புகழ் பெற்ற ஒரு நடிகருடன் நடிக்கும் ஆர்வம் எனக்கு பெரும் அளவில் இருந்தது. அது மட்டுமில்லாமல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய் சேதுபதி போன்ற திறமையுள்ளவர்களுடன் பணியாற்றியது எனக்கு ஒரு மிகச்சிறந்த அனுபவத்தை கொடுத்தது.

மாஸ்டர் படப்பிடிப்பின் போது பல மணி நேரம் ஒன்றாக செலவழித்தோம். என் சினிமா வாழ்க்கையில் அது ஒரு மைக்கல் மீண்டும் மாஸ்டர் படக்குழுவினரோடு பணியாற்ற வேண்டும் அதுதான் என் ஆசை என்று தெரிவித்துள்ளார்.