News
விஜய் ஜோடியாக நடிக்கும் மமிதா பைஜு ?
வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட். இப்படத்தை அடுத்து விஜய் தனத் 69வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்கவுள்ளார்.
இப்படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கும் நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க மலையாள நடிகை மமிதா பைஜூவுடன் படக்குழு பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு நடிகையாக இருந்து வரும் மமிதா பையூவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த செய்தியால் விஜய் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.