Connect with us
 

News

வில்லனாக அறிமுகமாகும் சூப்பர் ஸ்டார் மம்முட்டி !

Published

on

கதாநாயகர்கள் பலர் வில்லன் வேடங்களில் நடிக்கின்றனர். விஜய்சேதுபதி விக்ரம் வேதா மற்றும் மாஸ்டர் படங்களில் வில்லனாக வந்தார். மணிரத்னத்தின் கடல், விஷாலின் இரும்புத்திரை படங்களில் அர்ஜூன் வில்லன் வேடம் ஏற்றார்.

தனுஷ் நடித்த அனேகன் படத்தில் கார்த்திக்கும் என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்யும் ஜெயம் ரவி நடித்த தனி ஒருவன் படத்தில் அரவிந்த சாமியும் வில்லனாக நடித்தார்.

இந்நிலையில் மலையாள உலகின் முன்னணி நடிகரான மமுட்டிக்கும் வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாம். தெலுங்கில் அகில் கதா நாயகனாக நடிக்கும் ஒரு படத்தில் வில்லனாக நடிக்க அவரிடம் பேசி வருகிறார்கள்.

ஏற்கனவே மறைந்த ஆந்திர முதல் மந்திரி ராஜசேகர ரெட்டி வாழ்க்கை கதையான யாத்ரா படத்தில் ராஜசேகர் ரெட்டியாம மம்முட்டி நடித்து தெலுங்கு ரசிகர் மத்தியில் பிரபலமானார். எனவே தற்போது வில்லன் வேடத்துக்கு அவரை அணுகியுள்ளனர்.