News
தமிழ் திரையுலகில் முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படம் பொன்னியின் செல்வன் !

இயக்குநர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் நேற்று உலகமெங்கும் மிகவும் பிரமாண்டமாக வெளியானது.
எழுத்தாளர் கல்கி 70 வருடங்களுக்கு முன்னர் எழுதிய வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையைத்தான் படமாக இயக்கினார் மணிரத்னம்.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஜஸ்வர்யா ராய், ஜஸ்வர்யா லட்சுமி, பிரகாஷ் ராஜ், பிரபு, ஜெயராம், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் நாள் உலக வசூல் ரூ.80 கோடியை வசூளித்துள்ளதாக மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழ் திரையுலகில் ஒரு படத்துக்கு கிடைத்த அதிகபட்ச வசூல் இதுதான் என்று கூறப்படுகிறது.