Connect with us
 

News

குவாலியர் பகுதிகளில் பொன்னியின் செல்வன் படத்தின் இறுதிக்கட்டம் !

Published

on

இயக்குநர் மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக ஜதராபாத்தில் நடந்து வந்தது. தற்போது படக்குழுவினர் குவாலியர் சென்றுள்ளனர். மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர், ஓர்ச்சா பாரம்பரிய நகரங்களாகும். இங்கு அரண்மனைகளும் கோவில்களும் உயரமான கோட்டை சுவர்களும் பல அரிய சிற்பங்களும் உள்ள இடம்.

இந்த பகுதிகளில் பொன்னியின் செல்வன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நடத்தவுள்ளனர். படப்பிடிப்புக்காக அங்கு சென்ற நடிகர் பிரகாஷ்ராஜ் குவாலியர் விமான நிலையத்தில் கார்த்தியுடன் இணைந்து எடுத்துள்ள புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு நாங்கள் இருவரும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வந்துள்ளோம் என்று பதிவிட்டுள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்தில் வந்திய தேவனாக கார்த்தியும் சுந்த சோழனாக பிரகாஷ்ராஜும் நடிக்கின்றனர். பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் தயாராகி வருகிறது. இரண்டு பாகங்களாக வெளிவரவிருக்கும் இப்படத்தில் விக்ரம், சரத்குமார், ஜெயம் ரவி, பார்த்திபன், விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி என பலர் நடித்து வருகிறார்கள்.