News

புகைப்படங்களை நீக்கியது ஏன் மஞ்சிமா மோகன் விளக்கம் !

Published

on

நடிகை மஞ்சிமா மோகன் – நடிகர் கெளதம் கார்திக் இருவரும் தேவராட்டம் படத்தில் நடித்த போது காதலில் விழுந்தனர். சில வாரங்களுக்கு முன்னர் இருவரும் அதை வெளிப்படையாக அறிவித்தனர்.

இவர்களின் திருமணம் சென்னையில் வரும் 28-ம் தேதி நட்ச்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் மஞ்சிமா மோகன் தன்னுடைய பழைய புகைப்படங்கள் அனைத்தையும் இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கியுள்ளார். இது குறித்து ரசிகர்கள் கேள்வி கேட்ட நிலையில் அதற்கு மதிலளித்த மஞ்சிமா ‘இன்ஸ்டாகிராம் மக்களுடன் இணைந்திருப்பதற்கு ஒரு அழகான எளிய தளம். அது எந்த அளவிற்கு அழகானது, ஆபத்தானது என்று எனக்கு கவலையில்லை. அதனால்தான் என்னுடைய பழைய புகைப்படங்களை நான் இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கினேன்.

மீண்டும் நான் அனைத்தையும் தொடங்குவேன் என்று விளக்கமும் கொடுத்துள்ளார்.

Trending

Exit mobile version