News
ரஜினிகாந்த் ஜோடியாக மஞ்சு வாரியர் !

ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் வருகிற 10-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து தா.செ.ஞானவேல் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கும் ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கவுள்ளார். இப்படத்தில் ரஜினிகாந்துடன் அமிதாப்பச்சனும் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே இந்த படத்தில் மஞ்சு வாரியர் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகவுள்ளது. இவர்களுடன் பஹத் பாசில், தெலுங்கு நடிகர் நானி இருவரும் படத்தின் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.