Connect with us
 

News

தளபதி 67-ல் இணையும் நடிகர் மன்சூர் அலிகார் !

Published

on

விக்ரம் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பின்னர் Lokesh Kanagaraj அடுத்த படத்தின் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இன்னும் அதிகார பூர்வ அறிவிப்பு வரவில்லையென்றாலும் இவர்தான் தளபதி 67 படத்தை இயக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

Lokesh Kanagaraj அளித்த ஒரு நேர்கானலில் மன்சூர் அலிகானுக்காக தளபதி 67 படத்தில் ஒரு அற்புதமான கதாப்பாத்திரம் ஒன்று எழுதியுள்ளதாகவும் இன்னும் அதை மன்சூர் அலிகானிடம் நான் கூறவே இல்லை என்றும் கூறியுள்ளார். தனக்கு பிடித்த நடிகர்களில் மன்சூர் அலிகானும் ஒருவர் என லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

Lokesh Kanagaraj இயக்கத்தில் வெளியான ‘கைதி’ திரைப்படம் டில்லி என்ற வேடத்தில் கார்த்தி நடித்திருப்பார். ஆனால் அந்த கதாப்பாத்திரத்துக்கு முதலில் தேர்வு செய்யப்பட்டவர் மன்சூர் அலிகான் ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் அதில் மன்சூர் அலிகான் நடிக்க முடியாமல் போனது.

தற்போது விஜய் வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இப்படம் முடிவடைந்ததும் தளபதி 67 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.