News

ஆகஸ்ட் மாதம் மாரி செல்வராஜ் – துருவ் விக்ரமின் படம் ஆரம்பம் !

Published

on

வர்மா படத்தை தொடர்ந்து நடிகர் துருவ் விக்ரம் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் இன்னும் பெயரிடப்படாத விக்ரமின் 60-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் முதல் முறையாக விக்ரமுடன் இணைந்து நடித்து வருகிறார். விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் நிறைவடைகிறது என்கிறார்கள்.

இப்படத்தை தொடர்ந்து வரும் ஆக்ஸ்ட் மாதம் முதல் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள ஒரு புதிய படத்தின் படப்பிடிப்பில் துருவ் விக்ரம் கலந்து கொள்கிறார். இந்த படம் கபடி விளையாட்டு வீரனின் உண்மை கதை என்றும் இப்படம் துருவ் விக்ரமுக்கும் சரி இவரின் சினிமா பயணத்தின் தொடக்கத்திற்கும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

இப்படத்தை இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version