News

வெளியாகி 6 நாட்களில் பல கோடி லாபத்தை கொடுத்த மார்க் ஆண்டனி !

Published

on

இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்து கடந்த வாரம் வெளியான மார்க் ஆண்டனி உலக அளவில் ரூ.50 கோடி வசூலை கடந்துள்ளது.

மினி ஸ்டுடியோ சார்பில் வினோத்குமார் இப்படத்தை தயாரித்திருந்தார். டைம் ட்ராவல் கதைக்களத்தை கொண்டு உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் இப்படம் வெளியாக 6 நாட்கள் ஆன நிலையில் உலக அளவில் ரூ.50 கோடி வசூலை தாண்டி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மட்டுமே சுமா ரூ.35 கோடியை வசூலித்துள்ளது.

சுமார் ரூ.35 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் வெளியான 6 நாட்களில் மிகப்பெரிய லாபத்தை கொடுத்துள்ளது. இந்த வாரமும் பெரிதாக எந்த ஒரு பெரிய படங்களும் இல்லாத நிலையில் மேலும் பல கோடி வசூல் அதிகரிக்கும் என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

 

 

Trending

Exit mobile version