Reviews

மார்க் ஆண்டனி – திரைவிமர்சனம் !

Published

on

Cast: S.J.Suryah, Selvaraghavan, Suneel, Ritu Varma, Abhinaya, Redin Kingsley,
Y.Gee.Mahendran, Nizhalgal Ravi, Sendrayan, Vishnu Priya Gandhi, Dato Sri G Gnanaraja
Production: S.Vinod Kumar – Mini Studio
Director: Adhik Ravichandran
Screenplay: Adhik Ravichandran
Cinematography: Abinandhan Ramanujam
Editing: Vijay Velukutty
Music: GV Prakash
Language: Tamil
Runtime: 2 Hr 36 Mins
Release Date: 15.9.2023

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் மார்க் ஆண்டனி. மினி ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் வினோத் தயாரித்திருக்கும் இப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் செல்வராகவன், சுனில், விநாயகன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார்.

டைம் டிராவலை மையமாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். இதில் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இருவருமே இரட்டை வேடத்தில் நடித்துள்ளனர். விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு இப்படம் இன்று தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது. 

தன்னுடைய அப்பா தான் அம்மாவை கொன்றான் என்றும் அவன் மிகவும் மோசமானவன் என்றும் ஜாக்கி பாண்டியனை அப்பாவாக நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறான் மார்க். இந்த நிலையில் அவன் கையில் டைம் டிராவல் மிஷின் கிடைக்கிறது. 

அந்த மிஷின் மூலம் தன்னுடைய அப்பா மிகவும் நல்லவர் என்றும் ஜாக்கி பாண்டியன் தான் அவரை கொன்று அவரை பற்றி சமுதாயத்தில் தவறான பிம்பத்தை உருவாக்கி இருக்கிறான் என்பதையும் தெரிந்து கொள்கிறான். அதன் பின்னர் என்ன ஆனது என்பதுதான் மார்க் ஆண்டனி படத்தின் கதை.

விஷால், எஸ். ஜே. சூர்யா ஆகிய இருவரை சுற்றி தான் முழுக்கதையும் நகர்கிறது. இருவருக்கும் அப்பா , மகன் என இருவேறு தோற்ற ங்கள். வழக்கம் போல ஆக்ஷனிலும், நடிப்பிலும் விஷால் தான் ஏற்று நடித்த கதாபாத்திரங்க ளில் நம்பும் படியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

எஸ். ஜே. சூர்யாவிற்கு டைட்டில் கார்டில் நடிப்பு அரக்கன் என பேர் போட்டு இருந்தார்கள். அதற்கு தான் முழுமையாக தகுதியானவன் என்பதை தன்னுடைய நடிப்பின் மூலமாக சொல்லி இருக்கிறார் சூர்யா.

ஆம், ஒரு திறமை வாய்ந்த கலைஞனுக்கு அதனை வெளிப்படுத்த சரியான களத்தை மட்டும் உருவாக்கி கொடுத்தால் போதும். மீதி வேலையை அவன் பார்த்துக் கொள்வான் என் பதற்கு இந்தப்படம் மற்றுமொரு உதாரணம்.

ஒரு சின்ன ஸ்பேஸ், சின்ன டயலாக் கிடைத்தால் கூட போதும், அந்த மொத்த சீனையே தன் பக்கம் இழுத்து திரையரங்கேயே ஆர்ப்பரிக்க வைத்து விட்டார் சூர்யா.இதர கதா பாத்திரங்களும் கதைக்கு நியாயம் செய்திருக்கின்றன. 

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தன்னுடைய விறுவிறு திரைக்கதை யால் படத்தை எந்த இடத்திலும் போராடிக்காமல் பார்த்துக் கொள்கிறார். வசனங்களில் அனல் தெறிக்கிறது. ஆக்சன் காட்சிகளில் பழைய பாடல்களை பின்னணியாக வைத்தது இயக்குனர் லோகேஷ் படங்களை நியாபகப்படுத்தியது. ஜிவி பிரகாஷ் குமார் இசை மிரட்டல்.

 

 

Trending

Exit mobile version