News

இணையத்தில் வைரலாகும் அஜித் 61 படத்தின் மாஸ் லுக் !

Published

on

வலிமை படத்திற்கு பின்னர் இயக்குநர் எச்.வினோத் மற்றும் அஜித் மீண்டும் மூன்றாவது முறையாக இணையவுள்ளனர். இப்படத்தையும் போனி கபூரே தயாரிக்கவுள்ளார். வலிமை திரைப்படம் வெளியான பின்னரே இப்படத்திற்கான பணிகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் நாள் எப்போது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி மார்ச் 2-ம் தேதி ஜதராபாத்தில் அஜித் 61 படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சற்று தாமதமாக தொடங்கும் என்று தற்போது சொல்லப்படுகிறது.

படத்தின் திரைக்கதை மற்றும் செட் அமைக்கும் பணிகளின் தாமத்தால் படப்பிடிப்பு சற்று தாமதமாக தொடங்கப்படும் என்று கூறுகிறார்கள். இந்த நிலையில் இப்படத்தில் அஜித்துடன் முக்கியமான ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்க மோகன்லால், நாகர்ஜூனா உள்ளிட்ட பிறமொழி சூப்பர் ஸ்டார் நடிர்களுடன் பேச்சுவார்த்தை நடைந்து வருகிறதாம்.

இந்த நிலையில் தற்போது அஜித் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற புகைப்படம் ஒன்று தற்போது சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் அஜித் குமார் நீண்ட தாடியுடன் உள்ளார். இதை வைத்து பார்க்கையில் அஜித் 61 படத்தில் அஜித் குமார் தாடியுடன் வருகிறார் என்பது உறுதியாகியுள்ளது.

Trending

Exit mobile version