News

தன் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக மீனா அறிவிப்பு !

Published

on

நடிகை Meena இவரின் கணவர் வித்யாசாகர் கடந்த மாதம் நுரையீடல் பாதிப்பால் மரணம் அடைந்தார். மாற்று நுரையீரல் இவருக்கு கிடைக்காததால் சிகிச்சை பலனின்றி இவர் மரணமடைந்தார். இந்த நிலையில் தன் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்துள்ளார் Meena.

இது பற்றி தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் :- இந்த உலகில் ஒரு உயிரை காப்பாற்றுவதை விட பெரிய நமை எதும் இல்லை. உடல் உறுப்பு தானம் என்பது உயிரை காப்பாற்றும் உன்னதமான வழியாகும்.

நீண்ட நாள் நோயுடன் போராடும் பலருக்கு இது இரண்டாவது வாழ்வு. அதை நான் என் வாழ்வில் தனிப்பட்ட முறையில் சந்தித்திருக்கிறேன். எனது கணவருக்கு ஒரு நன்கொலையாளர் கிடைத்திருந்தால் எனது வாழ்க்கை மாற்றி அமைக்கப்படிருக்கும். ஒரு நன்கொடையாளர் எட்டு உயிர்களை காப்பாற்ற முடியும். அதனால் உடல் உறுப்பு தானத்தின் முக்கியதுவத்தை அனைவரும் புரிந்து கொள்வார்கள் என நான் நம்புகிறேன்’ என்று பதிவிட்டுள்ளாத் Meena.

Trending

Exit mobile version