News

பாபநாசம் – 2 படத்தில் கமல்ஹானுக்கு ஜோடியாக மீனா?

Published

on

மோகன்லால், மீனா ஜோடியாக நடித்த திரிஷ்யம், திரிஷ்யம்2 ஆகிய 2 மலையாள படங்களும் கேரளாவில் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றன. அதில் திரிஷ்யம் படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் வெளியானது. இதில் கமல்ஹாசன், கவுதமி இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர்.

அடுத்த திரிஷ்யம்2 படமும் பாபநாசம்-2 என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் கமல்ஹாசன் நடிக்க சம்மதம் தெரிவித்ததாக பேசப்படுகிறது. முதல் பாகத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்த கவுதமி இரண்டாம் பாகத்தில் இல்லை என்றும் அவர் நடித்த கதாபாத்திரத்தில் மீன நடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

2015-ம் ஆண்டு பாபநாசம் முதல் பாகம் தமிழில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்து என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version