Connect with us
 

News

Liger படத்தின் டப்பிங் பணிகளை முடித்த மைக் டைசன் !

Published

on

இந்திய அளவில் பிரபலமாகியிருக்கும் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள LIGER (Saala Crossbreed) படத்தின் முழு படப்பிடிப்பு பணிகளும் முடிக்கப்பட்டு, தற்போது போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத், இயக்கும் இத்திரைப்படத்தின் மூலம் உலகப்புகழ் குத்து சண்டை வீரர் மைக் டைசன் இந்திய சினிமாவில் அறிமுகமாகிறார்.

மைக் டைசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் அமெரிக்காவில் விஜய் தேவரகொண்டா மற்றும் மற்ற நட்சத்திரங்களுடன் இணைந்து படமாக்கப்பட்டது என்பது தெரிந்ததே. தற்போது, மைக் டைசன் படத்தின் டப்பிங்கை முடித்துள்ளார். இது குறித்து ஒரு வீடியோவில் “என்னிடம் அன்பாக நடந்துகொண்ட, உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி, நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன் , ”என்று கூறியுள்ளார்.

மைக் டைசன் இப்படத்தில் ஒரு அட்டகாசமான பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் அவரது பகுதிகள் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக இருக்கும். விஜய் தேவரகொண்டாவையும் மைக் டைசனையும் இணைந்து திரையில் காண்பது ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும். பெரிய திரையில் உண்மையான ஆக்சன் அதிரடியை காண திரை ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Puri connects மற்றும் பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான Dharma Productions நிறுவனங்கள் இனைந்து இப்படத்தை மிகப்பெரும் பொருட்செலவில் தயாரிக்கின்றனர். பூரி ஜெகநாத், சார்மி கவுர், கரண் ஜோஹர் மற்றும் அபூர்வா மேத்தா ஆகியோர் இணைந்து படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகின்றனர்.

மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவினை விஷ்ணு சர்மா செய்கிறார். தாய்லாந்தை சேர்ந்த ஸ்டண்ட் கலைஞரான Kecha சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகும் பன்மொழி இந்தியா திரைப்படமான ஆகஸ்ட் 25, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.