News

சீனா மொழிலியிலும் ரீமேக் ஆகிறது திரிஷ்யம் 2 திரைப்படம் !

Published

on

மோகன்லால், மீனா இணைந்து நடித்து 2013-ம் ஆண்டு திரைக்கு வந்த திரிஷ்யம் படம் மிகப்பெரிய வசூல் சாதனை நிகழ்த்தி இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தது.

இந்த படம் தமிழிலும் கமல்ஹாசன் கெளதமி நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆகி தமிழிலும் பெரும் வரவேற்பை பெற்றது. பின்னர் தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.

இது போல சீன மொழியிலும் திரிஷ்யம் படத்தை ரீமேக் செய்து 2019-ம் வருடம் வெளியிட்டனர். அங்கும் படம் வெற்றி பெற்றது. சமீபத்தில் மோஹன்லால் மீனா நடிப்பில் திரிஷ்யம்-2ம் பாகமும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படமும் தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளில் ரீமேக் ஆகவுள்ளது. இதுபோல் திரிஷ்யம்-2ம் பாகத்தை சீனா மொழியிலும் ரீமேக் செய்யவுள்ளனர். திரிஷ்யம் முதல் பாகத்தின் சீன அரசின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ம கிளைமாக்ஸ் காட்சியை நாயகன் போலீசில் சரண் அடைவது போல் மாற்றி இருந்தனர். தற்போது இரண்டாம் பாகத்திலும் திரைக்கதையிலும் லேசான மாற்றம் செய்யவுள்ளனர். திரிஷ்யம் 2 சீன ரீமேக்கை சாம்குவாவே இயக்கவுள்ளார்.

Trending

Exit mobile version