Connect with us
 

News

மே 6 -ம் தேதி வரிசை கட்டும் அதிக தமிழ் திரைப்படங்கள் !

Published

on

தமிழ் சினிமா கொரோனா மூன்றாம் அலைக்கு பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு எழுந்து வருகிறது. கடந்த வாரம் மட்டும் திரையரங்குகளில் 5 படங்கள் வெளியானது.

அதே போல இந்த வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகவுள்ளது அந்த வரிசையில் மே 5-ம் தேதி ஜி.வி.பிரகாஷ் நடித்த ஜங்கரன், மே 6-ம் தேதி கே.எஸ்.ரவிக்குமார் நடித்துள்ள ‘கூகுள் குட்டப்பா’ ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ள ‘விசித்திரன்’ நாமக்கல் எம்.ஜி.ஆர்.நடித்துள்ள ‘உழைக்கும் கைகள்’ மற்றும் ‘வாய்தா, துணிகரம் போன்ற படங்கள் வெளியாகவுள்ளது.

இதை தவிர ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்திருக்கும் மார்வல் படமான ‘டாக்டர் ஸ்ட்ரேன்ஜ் இன் த மல்டிவெர்ஸ் ஆப் மேட்னெஸ்’ படமும் வெளியாகவுள்ளது.

இவைகளை தவிர இயக்குநர் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள ‘சாணி காயிதம்’ என்ற படமும் நேரடியாக அமேஷன் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

Continue Reading