Connect with us
 

Reviews

Muddy – Movie Review !

Published

on

பி ரேமா கிருஷ்ணதாஸின் பிகே 7 கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில், டாக்டர் பிரகபல் இயக்கியுள்ள படம் மட்டி. முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்க ஆறு மொழிகளில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டிருக்கிறது. ஹாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றி பெற்ற போர்டு Vs பெராரி வகையான திரைப்படம்.

அந்த ஹாலிவுட் படத்தை பார்த்த தமிழ் ரசிகர்கள் இப்படி ஒரு திரைப்படம் தமிழில் வர வாய்ப்பே இல்லை என்று கூறினார்கள். நான் எடுக்கிறேன் என்று ஆறு மொழிகளில் மிக பிரம்மாணடமாக எடுத்துள்ளார் இயக்குநர் டாக்டர் பிரகபல்.

Movie Details

டெண்டருக்கு விடப்பட்ட காட்டு மரங்களை வெட்டி விற்றுகும் வேலையில் இருக்கிறார் படத்தின் நாயகனான ரிதன். இவரின் தம்பி கார்த்திகேயா இவர் மட் ரேஸில் விளையாடி வருகிறார். இவருக்கும் ரிதன் கிருஷ்ணாவுக்கு கொஞ்சம் கூட ஒத்து போகாது.

ஒரு நாள் மட் ரேஸில் யுவன் டோனி என்ற பையனை அந்த ரேஸில் தோற்கடிக்கிறான். அதோ இல்லாமல் டோனியின் காலையும் உடைத்து விடுகிறார் யுவன். நேரம் செல்ல செல்ல கார்த்தியை எப்படியும் தாக்க வேண்டும் என்ற திட்ட போடுகிறான் டோனி அதனால் இதே மட் ரேஸில் உன்னை தோற்றடித்து உன்னையும் அழிக்கிறேன் பார் என்று சவால் விடுகிறான். தன் சகோதரனை வெறுக்கும் ரிதன் டோனியின் அந்த திட்டலிருந்து எப்படி யுவனை காப்பாற்றினார் என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

படத்தில் கார் பந்தயம்தான் முழு படமும் என்று நம்மை ஆரம்பத்திலேயே தயார் படுத்தி விடுகிறார்கள். அதற்குத்தான் படத்தின் தொடக்கதிலேயே ஒரு ரேஸை வைத்து நம்மை தயார் படுத்தி விடுகிறார்கள். படத்தின் இரண்டாம் பாதி முழுவதும் நம் கண்களை மூடவிடாமல் படத்தை கவணிக்க வைக்கிறார் இயக்குநர்.

நாயகனாக வரும் ரிதன் கிருஷ்ணா மலை முகடுகளில் கார் ஓட்டும் காட்சிகளிலும் வில்லனுடனான சண்டைக்காட்சிகளிலும் அசத்தியுள்ளார். தம்பி தன்மேல் பாசம் காட்டவில்லையென்றாலும் ஒரு அண்ணனாக பாசத்தை விட்டுக்கொடுக்காத பாசமிகுந்த அண்ணனாக நம் மனதை கவர்கிறார்.

இரண்டாவது நாயகனாக வரும் யுவன் கிருஷ்ணா அண்ணை பார்த்தாலே முறைப்பது, சண்டைபோடுவது என படம் முழுவதும் வலம் இவர் படத்தின் கிளைமாக்ஸில் அண்ணனும் இணைந்து வில்லனை தோற்கடிக்கும் காட்சியில் கவனம் ஈர்க்கிறார்.

படத்தில் நாயகியாக வரும் அனுதா சுரேஷ் மற்றும் அமித் சிவதாஸ் இருவருக்குமே படத்தில் சில காட்சிகள் மட்டுமே பெரிதாக காட்சிகள் இல்லை படத்தில் நாயகிகள் வேண்டும் அதற்காக இவர்கள் இருவரும்.

படத்தில் மிகப்பெரிய பலம் என்றால் படத்தின் காட்சியமைப்பு மற்றும் விஸ்சூவல். படம் மட் ரேஸ் என்பதால் காட்சியமைப்புகள் சுவாரஸ்யமானதாக தெரிகிறது. அதே போலா அண்ணன் – தம்பு செண்டிமெண்ட் நன்றாக உள்ளது.

மட் ரேஸ் நடக்கும் விதம் அதனால் இளைஞர்கள் எவ்வாறு பாதிக்கிறார்கள் என்பதை மிக அழகாக காட்டியுள்ளார் இயக்குநர்.
Cinetimee

படத்தின் மிகப்பெரிய குறை என்றால் படத்தின் காட்சிகள் மிக மிக மெதுவான வேகம். படத்தின் மையக்கருத்துக்கு வருவதற்கே மிக நீண்ட நேரம் எடுக்கிறது. இடைவேலையில் படத்தின் மேல் உள்ள விறுவிறுப்பை கொடுத்தாலும் அந்த விறு விறுப்பை இரண்டாம் பாதி சரியாக கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை.

இரண்டாம் பாதியில் வரும் உணர்ச்சிகரமான பல காட்சிகள் அவ்வளவு ஈர்ப்பை கொடுக்கவில்லை.பல இடங்களில் லாஜிக் மீறல்கள் உள்ளது. அதே போல பல காட்சிகள் காரணமே இல்லாமல் எங்கு எங்கோ சென்று ரசிகர்களை சலிப்பு தட்ட வைக்கிறது.

படத்தில் வரும் வில்லன் பார்க்க நல்ல முரட்டுத்தனமான முக பாவனை உடல் அமைப்பு என மிரட்டுகிறார். எங்குதான் தேடி பிடித்தார்களோ தெரியவில்லை. படத்தில் நடித்த அனைத்து முகங்களும் புது முகம் என்று நம்மால் நம்ம முடியவில்லை.

படத்தின் தொழிநுட்ப வேலைகள் தரமாக கொடுத்துள்ளனர். ரேஸில் எங்கு வைத்தால் அழகாக காட்சிகள் வரும் என்று தெரிந்து அதை மிக மிக அழகாக செய்துள்ளார். அதே போல எடிட்டிங் மற்றும் படத்தின் பின்னணி இசை என அனைத்துமே படத்திற்கு பலம் சேர்கிறது.

கே.ஜி.எஃப் படத்தின் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இந்த படத்திற்கு இசையமைத்திருகிறார்.அதன் காரணமாகவோ என்னமோ படத்தில் பல இடங்களில் கே.ஜி.எஃப் வாடை மிதமாக வீசுகிறது. ஆனாலும் அது படத்திற்கு அழகாக பொருந்தியிருக்கிறது.


மொத்தத்தில் மட்டி ஆக்‌ஷன் பிரியர்களின் விருந்து.