News
சூர்யா 42 படத்தில் மிருணாள் தாக்கூர் நடிக்கிறாரா?

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா தனது 42-வது படத்தில் நடித்து வருகிறார். சுமார் 13 மொழிகளில் உருவாகும் இந்த படம் வரலாற்று சம்பவங்களை கொண்ட கதையம்சம்.
இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்து வரும் நிலையில் இப்படத்தின் பிளாஷ்பேக்கில் வரும் காட்சியில் ஒரு முக்கிய வேடத்தில் சீதா ராமம் படத்தில் நடித்த நடிகை மிருணாள் தாக்கூர் நடித்து வருவதாக தகவல் வெளியானது.
ஆனால் இந்த தகவலை இப்படத்தின் தயாரிப்பாளரான ஞானவேல் ராஜா மறுத்திருந்தார். சூர்யா 42 படத்தில் மிருணாள் தாக்கூர் நடிப்பதாக வெளியான செய்தி வெறும் வதந்தி. இப்படத்தில் அவர் நடிக்கவில்லை என்று செய்தி வெளியிட்டுள்ளார்.