சாந்தனுவுக்கும், அதுல்யா ரவிக்கும் திருமணம் நடைபெறுகிறது. பின் முதலிரவுக்கு முன் சாந்தனு உடைய தாத்தா பாக்யராஜ் உங்கள் இருவருக்கும் முதலிரவில் உடல் உறவு நடந்தால் பரம்பரை முதலிரவில் முழுவதையும் ஆசிரமத்துக்கு எழுதி வைத்து விடுவேன் என்று கூறுகிறார்.
இன்னொரு பக்கம் அதுல்யாவிடம் அவர் அத்தை ஊர்வசி உங்கள் இருவருக்கும் முதலிரவு நடைபெறவில்லை என்றால் குழந்தை பிறக்காது என்ற தோஷம் இருப்பதாக கூறுகிறார். இதனையடுத்து இருவரும் தோஷம் நடந்ததா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
படம் முழுவதும் முழுக்க முழுக்க ஒரே ஒரவில் நடப்பது போல கதைக்களம். படம் முழுவதும் நகைச்சுவை என்ற பெயரில் இரட்டை அர்த்த வசனங்களை கொட்டி தீர்த்துள்ளார்.ஆனால் அவற்றில் பெரும்பாலான காட்சிகள் பாக்யராஜ் பாணி கதை திரைக்கதையும் அருதப்பழசாக இருக்கிறது.
படத்தின் தொடக்கத்தில் வரும் காட்சிகள் எல்லாம் அப்படியே சீரியலில் வரும் காட்சிகளைப் போலவே இயக்கி இருக்கிறார் இயக்குனர். அதே போல் படத்தில் பல நகைச்சுவை நடிகர்கள் போல் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு காமெடி இல்லை. இதனால் மக்கள் மத்தியில் வெறுப்பு தான் மிஞ்சுகிறது.
நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கின் பெயரால் இத்திரைப்படம் முழுக்க முழுக்க பொறுமையை சோதிக்கும் காட்சிகளை கொண்டுள்ளது. யோகி பாபு – முனிஷ்காந்த் – ரவீந்தர் – மயில்சாமி – மனோபாலா ஆகியோரின் முழு உழைப்பும் எந்த விதமான சிரிப்பையும் பெரிதளவில் ஏற்படுத்தவில்லை
தம்பதியினர் முதலிரவை நோக்கிச் செல்லும் ஆரம்பக் காட்சிகள் செயற்கையாக அரங்கேறியுள்ளன, குறிப்பாக அதுல்யா தனது தோழிகளுடன் பேசும் உரையாடல்கள் அமெச்சூர் மற்றும் மோசமானவை
முருங்கக்காய் சிப்ஸ் திரைப்படம் அடல்ட் நகைச்சுவை, பொழுதுபோக்கு என்ற பெயரில் சற்று சலிப்பூட்டும் காட்சிகளின் பார்ப்பது போல் தெரிகிறது.
Cinetimee
கதை இது கொஞ்சம் பாதை மாறினால் பிட்டு படமாக மாறியிருக்கும், ஆனால் இழுத்து பிடித்து அடல்ட் காமெடியாக இப்படத்தை முடித்துள்ளனர். நடிகர்கள் பொறுத்தவரை, சாந்தனு & அதுல்யா இருவருமே குறையில்லாமல் நடித்துள்ளனர். ஷாந்தனுவின் நடனம் மிக சிறப்பாக உள்ளது, அதுல்யாவின் அந்த க்யூட் ரியாக்ஷன்ஸ் ரசிக்கும்படி அமைந்துள்ளது. இவர்களை தொடர்ந்து கிட்டத்தட்ட சிறப்புத் தோற்றம் போல் வரும் பாக்யராஜ் & ஊர்வசி சொல்லவா வேண்டும்.
முதலிரவை மையக்கருவாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஸ்ரீஜர். படம் முழுக்க முழுக்க ஒரே இரவில் நடக்கிறது. அதுவும், ஒரே அறையில் தான் கதை நகர்கிறது. இரட்டை அர்த்த வசனங்களை அள்ளித் தெளித்திருக்கிறார் இயக்குனர். நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், நகைச்சுவை அதிகம் எடுபடவில்லை.
தரண்குமார் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் விதத்தில் இருக்கிறது. குறிப்பாக ரமேஷ் சக்ரவர்த்தியின் ஒளிப்பதிவோடு பாடல்களை பார்க்கும் போது மிகவும் கலர்ப்புல்லாக இருக்கிறது. படத்திற்கு தேவையான ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார் ரமேஷ் சக்ரவர்த்தி.