Connect with us
 

News

முத்தையா – கமல்ஹாசன் கூட்டணியில் திடீர் மாற்றம் !

Published

on

இயக்குநர் முத்தையா உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தை இயக்க இருந்தார். இப்படத்தில் ஆர்யா நடிக்கப்போவதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் இப்படத்தை கமல் தயாரிக்கவில்லையென்றும் டிரம்ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டின் இறுதியில் ஆரம்பிக்கவுள்ளதாம்.

வழக்கமாக இயக்குநர் முத்தையாவின் படங்களில் சாதிக்கருத்துகள் இருக்கின்றது என்று ஒரு மிகப்பெரிய குற்றச்சாட்டு உள்ளது. இருந்த போதும் இவரின் படங்களுக்கு தென் மாவட்டங்களில் நல்ல வரவேற்பும் வெற்றியையும் கொடுத்துள்ளது.