News
எனது நீண்ட கனவை நிறைவேற்றியது தமிழ் இயக்குநர் – தர்ஷா குப்தா !

ரிசி ரிச்சர்டு – மும்மை அழகி தர்ஷாகுப்தா ஜோடியாக நடித்துள்ள திரைப்படம் ருத்ரதாண்டவம். படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நேற்று முன் தினம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய தர்ஷா குப்தா.
நான் சின்னத்திரை நிகழ்ச்சி மூலம் அனைவருக்கும் அறிமுகமானேன். ஆனால் என் நீண்ட நாள் ஆசை கனவு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான். அதிலும் குறிப்பாக மேக்கப் இல்லாமல் கிராமத்து பெண் வேடத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசை.
எனது இந்த ஆசையை இயக்குநர் மோகன்ஜி ருத்ரதாண்டவம் படத்தின் மூலம் நிறைவேற்றியுள்ளார். இந்த படத்தில் நான் ஒரு கிராமத்து பெண்ணாக அழுத்தமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன். அது எனக்கு மிகவும் சவாலானதாக இருந்தது என்று தெரிவித்தார்.
ருத்ரதாண்டவம் படத்தில் இயக்குநர் கெளதம் மேனன் முக்கியமான ஒரு வேடத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.