News

ஹன்சிகா நடிக்கும் மை நேம் இஸ் ஸ்ருதி திரைப்படம் !

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கிட்டத்தட்ட 50 படங்களில் நடித்து விட்டார் நடிகை ஹன்சிகா. ஆனால் கடந்த சில வருடங்களாக மஹா என்கிற ஒரு படத்தில் மட்டுமே நடித்திருந்தார்.அந்த படமும் இன்னும் வெளியாகவில்லை கடந்த வாரம்தான் இப்படத்தின் டீஸர் வெளியானது.

இந்த நிலையில் ஹன்சிகா நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் தெலுங்கில் ஒரு படத்தில் நடிக்கிறார்.இந்த படத்திற்கு மை நேம் இஸ் ஸ்ருதி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் துவக்க விழா பூஜை நேற்று முன் தினம் நடைபெற்றது. இப்படத்தை ஶ்ரீனிவாஸ் ஓம்கார் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தை அவர் கூறும் போது:- ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பார் என்று சொல்வார்கள். ஆனால் ஒரு பெண் எதிர்கொள்ளும் அத்தனை பிரச்சனைகளுக்கும் ஒரு ஆண் எப்படி பொறுப்பாகிறான் என்பதுதான் இந்த படம் என்று கூறினார்.

Trending

Exit mobile version