Connect with us
 

Reviews

நானே வருவேன் – விமர்சனம் !

Published

on

Movie Details

மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் இயக்குநர் செல்வராகவன், தனுஷ், யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் உருவாகும் திரைப்படம் நானே வருவேன் என்பதால் ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு அந்த எதிர்பார்ப்பை நானே வருவேன் பூர்த்தி செய்ததா?

இரட்டையர் தனுஷ் கதிர் மற்றும் பிரபு அதில் கதிர் சைக்கோ குணம் கொண்டவன். இவனின் இந்த சைக்கோ குணம் தாங்க முடியாமல் ஒரு நாள் இரவு முழுவதும் வீட்டின் வெளியியே ஒரு மரத்தில் கட்டி வைக்கிறார் அப்பா. இதனால் கோபம் அடைந்த கதிர் தன் அப்பாவையே கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்கிறார். இதனால் பயந்து போனா இவனின் அம்மா ஞாதகம் பார்க்க கதிர் – பிரபு இணைந்து இருந்தால் ஒருவன் ஒருவனை கொலை செய்து விடுவான் என கூற கதிரை ஒரு கோயிலில் கொண்டு விட்டு விட்டு பிரபுவை மட்டும் அழைத்து செல்கிறார் தன்னுடன்.

இருபது வருடங்களுக்கு பின்னர் பிரபு எனும் தனுஷ் தன் மனைவி இந்துஜா மகள் சத்யாவுடன் சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். ஒரு நாள் இவரின் மகளின் உடலுக்குள் ஒரு ஆவி புகுந்து கொள்கிறது. புகுந்து விட்டு வெளியில் செல்ல மறுக்கிறது. அப்படி நான் உன் மகளின் உடலை விட்டு போக வேண்டும் என்றால் என் அப்பாவை கொலை செய்ய வேண்டும் என்று சொல்கிறது அந்த ஆவி. அந்த ஆவி யார்? ஆவியின் அப்பா யார்? எதற்காக கொலை செய்ய சொல்கிறது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

படத்தில் இரண்டு தனுஷ் கதிர் – பிரபு இதில் கதிர் சைக்கோ இந்த தனுஷ் படத்தின் இரண்டாம் பாதியிலிருந்தான் வருகிறார். இடைவேளை காட்சியில் அந்த சைக்கோ தனுஷ் காட்டும் போதும் திரையரங்கில் ரசிகர்கள் ஆரவாரம் விண்ணை பிளக்கிறது. முதல் பாதி முழுவதும் பிரவு ஆக்கரமைப்பு செய்ய இரண்டாம் பாதி முழுவதையும் கதிர் எடுத்துக்கொள்கிறார். அதிலும் கதிர் கதாப்பாத்திரல் வரும் தனுஷின் சைக்கோ நடிப்பும் அவரின் ஸ்டைல் அனைத்துமே மிரட்டுகிறது நம்மை. பிரபு கதாப்பாத்திரத்தில் வரும் தனுஷ் ஒரு அன்பான கணவனாகவும் பாசமான அப்பாவாகவும் மகளை ஆவியிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என போராடும் ஒரு தந்தையாகவும் இரு கதாப்பாத்திரங்களுக்குமே நிறையமே வித்தியாசம் காட்டி நடித்துள்ளார்.

2 மணி நேரம் ஓடும் படத்தில் 90 சதவீதம் தனுஷ்கள் மட்டுமே வருகிறார்கள். இதனால் பிரபு தனுஷ் மனைவியாக வரும் நடிகை இந்துஜா ஆகட்டும் கதிர் மனைவியாக வரும் எல்லி அவரம் ஆகட்டும் மற்றும் நடிகர் திலகம் பிரபு, யோகி பாபு என அனைவருக்குமே காட்சிகள் மிக குறைவு.

தனுஷின் மகளாக வரும் ஹியா தவே ஆகட்டும் மகன்களாக நடித்திருக்கும் பிரபவ், பிரணவ் ஆகியோரின் நடிப்பும் கவணிக்க வைக்கிறது.

படத்தின் மிகப்பெரிய பலம் யுவனின் பின்னணி இசை படம் முழுவதும் இவரின் பின்னணி இசை முதுகில் தாங்கி பிடிக்கிறது. அதிலும் இடைவேளை காட்சியிலும் கதிர் தனுஷை காட்டும் போதும் பின்னணி இசை உச்சம்.

ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு கண்களுக்கு குளிர்ச்சியை தருகிறது குறிப்பாக இரவு நேர காட்சிகள் அற்புதம் அருமை. புவன் சீனிவாசனின் படத்தொகுப்பு படத்திற்கு மேலும் பலம் சேற்கிறது.

படத்தில் ஆரம்பத்திலெயே சிறப்பு தோற்றத்தில் வரும் செல்வராகவன் ரசிக்க வைக்கிறது. படத்தில் இரண்டு தனுஷ்கள் பெரிய அளவில் மோதிக்கொள்ளவில்லை என்பது ஒரு சின்ன வருத்தம். ஒரு வேளை இரண்டாம் பாகம் கண்டிப்பாக வரும் அதில் வைக்கலாம் என நினைத்து வைக்கவில்லையோ தெரியவில்லை.

செல்வராகன் எப்போதுமே வித்தியாமாக சிந்தனை கொண்ட ஒரு இயக்குநர் அதை இந்த படத்திலும் நிரூபித்தி விட்டார். இது பேய் படம் அல்ல, சென்டிமென்ட் படமும் அல்ல, சைக்கோ படமும் அல்ல, இது முற்றிலும் செல்வராகனின் வித்தியாசமான படைப்பு நம்பி உங்கள் குடும்பத்துடன் வரலாம் இந்த நானே வருவேன் திரைப்படத்திற்கு.
Naane Varuvean Review By Cine Time

[wp-review id=”44136″]