Connect with us
 

News

மின்னல் வேக படப்பிடிப்பில் நானே வருவேன் !

Published

on

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் நானே வருவேன். இப்படத்தின் படப்பிடிப்பி சமீபத்தில் ஆரம்பித்து தொடர்ந்து நடந்து வருகிறது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகிவரும் இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் தனுஷ் ஜோடியாக நடிகை இந்துஜா நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளாதாகவும் அடுத்த வருடம் ஜனவரி மாதம் மின்னல் வேகத்தில் இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்து விட படக்குழு திட்டமிட்டுள்ளது.

துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுக்கோட்டை, மயக்கம் என்ன படங்களுக்கு பின்னர் தனுஷ் மற்றும் செல்வராகவன் மீண்டும் இணையும் திரைப்படம் என்பதால் இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.