News

தளபதி விஜய்க்கு வில்லனாக மாறும் நானி !

Published

on

நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் தளபதி விஜய். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். வில்லன் வேடத்தில் செல்வராகன் நடிக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

இந்நிலையில் தளபதி 66 படதின் அதிகாரபூர்வ அறிவிப்பு இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது. தளபதி 66 படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடி பல்லி இயக்கவுள்ளார். இவர் இதற்கு முன்னர் தமிழில் கார்த்தி மற்றும் நாகர்ஜூனா நடிப்பில் வெளியான தோழா படத்தை இயக்கியவர்.

தளபதி 66 படத்தை தில்ராஜுவின் வெங்கடேஷ்வரா கிரியேசன்ஸ் நிறுவனம் மிக மிக பிரம்மாண்டமான செலவில் தயாரிக்கவிருக்கிறது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்படம் நேரடியாக உருவாகவுள்ளது. இப்படம் விஜய்க்கு முதல் தெலுங்கு திரைப்படமாகும்.

இந்த நிலையில் தளபதி 66 படத்தில் விஜய்க்கு வில்லனாக பிலபல தெலுங்கு முன்னணி நடிகரான நான் ஈ முகழ் நானி நடிக்கவிருப்பதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Trending

Exit mobile version