News
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் படத்திலிருந்து நயன்தாரா திடீரென விலகினார் !

பிரபல தயாரிப்பு நிறுவனம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் அடுத்த தயாரிக்கவிருந்த படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மிக்கியமான வேடத்தில் நடிப்பதாக இருந்து வந்த நிலையில் என்ன காரணம் என்று தெரியவில்லை அப்படத்திலிருந்து நயன்தாரா திடீரென விலகியுள்ளார்.
நயன்தாரா நடிக்கவிருந்த அந்த கதாப்பாத்திரத்தில் நடிகை சாரதா ஶ்ரீனாத் நடிக்கவுள்ளார் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிகர்கள் ஶ்ரீ மற்றும் விதார்த் என இருவர் நடிக்கவுள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் இயக்குநர் யுவராஜ் தயாளன் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் ஆரம்பிக்கவுள்ளது. இப்படம் முழுக்க முழுக்க ஓடிடி தளத்திற்காக தயாரிக்கும் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.