News
பல கோடிகளுக்கு விலை போன நெற்றிக்கண் திரைப்படம் !

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த படத்தில் நடித்து வரும் நயன்தாரா அடுத்தப்படியாக காத்து வாக்குல ரெண்டு காதல், என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்தநிலையில் காதலன் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் மிலிந்த்ராவ் இயக்கத்தில் நெற்றிக்கண் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியிட தயாராகவிருந்தது. கொரோனா இரண்டாம் அலை காரணமாக வெளியீடு தள்ளிபோனது.
நெற்றிக்கண் படம் ரூ.25 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரியன் படமான பிளைன்ட் படத்தின் கதையை தழுவி தயாரிக்கப்பட்டுள்ள படம் இது.
இதில் நயன்தாரா கண் பார்வை இல்லாதவராக நடித்திருந்தார் ஒரு சைக்கோ கொலைக்காரனை பழிவாங்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.