News

வெளியாகி சில நிமிடங்களில் திருட்டு இணையத்தில் வெளியான நெற்றிக்கண் !

Published

on

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், கார்த்தி, விஷா, தனுஷ், உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களின் படங்கள் அனைத்துமே திரையரங்குகளில் வெளியாகி ஒரு சில நிமிடங்களில் திருட்டி இணையத்தில் வெளியாகி தயாரிப்பாளர்களுக்கு அதிச்சியையும் நஷ்டத்தையும் கொடுக்கும்.

இதனை தடுக்க தியேட்டர்களில் கேமரா கொண்டு செல்ல தடையும் விதித்தது. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும் பயன் இல்லை. கொரோனா காரணமாக தற்போது படங்கள் அனைத்தும் ஒ.டி.டி தளத்தில் வெளியாகிறது. இதில் கொடுமை என்னவென்றால் ஒ.டி.டி தளத்தில் வெளியாக முன்னரே திருட்டு இணையத்தில் வெளியாகிவிடுகிறது.

ஒ.டி.டி தளத்தில் சூர்யாவின் சூரரை போற்று படம் வெளியானது. ஆனால் அதற்கு முன்னரே திருட்டு இணையத்தில் வெளியாகியது. தற்போது நேற்று நயன்தாரா நடிப்பில் ஓ.டி.டி தளத்தில் வெளியான திரைப்படம் நெற்றிக்கண் இப்படத்தில் பார்வையற்ற பெண்ணாக நயன்தாரா நடித்துள்ளார்.

இப்படத்தை எச்.டி தரத்தில் திருட்டு இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இதனால் நயன்தாராவும் படக்குழுவினரும் பெரும் அதிர்ச்சியானதாக கூறப்படுகிறது.

இதிபோல் இந்தியில் அஜய்தேவ்கான், சஞ்சய்தத் மற்றும் சோனாக்கி சின்ஹா நடிப்பில் வெளியான புஜ் தி பிரைடு ஆப் இந்தியா ஓ.டி.டி தளத்தில் வெளியாக சில நிமிடங்களில் திருட்டு இணையத்தில் வெளியானது.

Trending

Exit mobile version