Connect with us
 

News

நயன்தாரா புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது !

Published

on

நயன்தாராவின் பிறந்த நாள் இன்று கொண்டாடுகிறார். இதையடுத்து இன்று நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

நயன்தாரா நடிக்கும் இப்படத்திற்கு கனெக்ட் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை அஸ்வின் சரவணன் என்ற இயக்குநர் இயக்கவுள்ளார். இவர் 6 வருடங்களுக்கு முன்னர் மாயா என்ற படத்தை இயக்கிவிருந்தார். இப்படம் மிகப்பெரிய ஒரு வசூலை கொடுத்தது.

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து ரவுடி பேபி நிறுவனத்தின் மூலம் இப்படத்தை தயாரிக்கிறார்கள். இப்படத்தில் நயன்தாராவுடன் சத்யராஜ், அனுபம்கெர், ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் ஆரம்பிக்கவுள்ளது. இன்று காலை இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.