Connect with us
 

News

சர்வதேச பட விழாவுக்கு தேர்வான நயன்தாரா திரைப்படம் !

Published

on

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிகையாக மட்டுமில்லாமல் காதலன் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து வரிசையாக படங்கள் தயாரித்து வருகிறார்.அந்த வரிசையில் நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் கூழாங்கள் போன்ற படங்களை தயாரித்து வருகிறார்கள்.

பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கியுள்ள கூழாங்கல் திரைப்படம் சர்வதேச பட விழாக்களில் கல்ந்து கொண்டு பல விருதுகளையும் வென்று வருகிறது.

நெதர்லாந்தில் நடந்த ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட கூழங்கல் திரைப்படம் சிறந்த படத்துக்கான விருதை பெற்றது. ரோட்டர்டாம் சர்வதேச விழாவில் கலந்து கொண்டு விருது பெற்ற முதல் தமிழ் படம் என்ற பெருமை கூழாங்கல் படத்துக்கு சேரும். அதன் பின்னர் அமெரிக்கா நியூயார்க்கில் நடந்த டைரக்டர்ஸ் நியூ திரைப்பட விழாவிலும் கூழாங்கல் திரையிடப்பட்டு சிறந்த திரைப்படத்துக்கான விருதை அங்கும் வாங்கியது.

இந்த நிலையில் தற்போது சீனாவில் நடைபெறவுள்ள ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிட கூழங்கல் திரைப்படம் தேர்வாகியுள்ளாது. நாளை ஆரம்பிக்கவுள்ள இந்த விழா இந்த மாதம் 20-ம் வரை நடைபெறவுள்ளதாம்.